துண்டு
81
[பேசிக்கொண்டே ராம்லால், டெலிபோன் இருக்குமிடம் செல்கிறார்.]
[சுப்புத்தாய், வெள்ளித் தட்டை எடுத்துக் கொண்டு உட்புற அறையை நோக்கிச் செல்கிறார்கள்]ராம்: (டெலிபோனில் கலகலப்பான குரலில்) சங்கரலிங்கமா...ஆமா...ஆமாம் இப்பத்தான்...ஆமா...யாரு? பாரத்பூஷனா...நம்ம மகனைத்தானே கேட்கறீங்க...லீவுக்கே வரவில்லை...ஆமா.. .சொல்றாங்க...என்ன மீட்டிங்கோ மகா நாடோ...இவனுக்கு எதுக்கு அதெல்லாம்...ஆகட்டும், ஆகட்டும்...அதுவா? அதிகம் கிடைக்கலே...நல்ல வைரமாக கிடைக்கல்லே...ஏதோ கொஞ்சம் வாங்கினேன்... இருக்கும் மூன்று லட்சத்துக்கு இருக்கும்னு வையுங்களேன்...சரி...சரி! நாளைக்கு கட்டாயம் பார்க்கறேன், கந்தசாமி கோயில் பக்கம்...காசி தீர்த்தமா...ஓ! அனுப்புகிறேன்...இரண்டு செம்பு அனுப்பறேன்... என்னது?...வைரமா! பார்ப்போம்...நமக்குக் கொஞ்சம் தேவை இருக்குது, அது போக மத்தது உங்களுக்கு இல்லாம வேறு யாருக்கு...விலை கொஞ்சம் கூடுதல் தான்...என்ன, என்ன? மகன் வந்ததும் சொல்றேன். அடே அப்பா! விருந்தா! சாப்பாட்டுக்கு வாடான்னா வாரான். பெரிய மனுஷனா...நம்மப் பயலா. இருக்கட்டும் உங்க ஆசீர்வாதம், ஊருக்கெல்லாம் பெரிய மனுஷனாகிவிட்டாத்தான் என்னவாம்; உங்களுக்கு அவன் சின்னப் பயதானே... சரி...சரி... ஆகட்டும்... சுப்புத்தாயா ... சௌக்யந்தான்...சொல்றேன்...கட்டாயமாகச் சொல்றேன்...
ராம்லால்: யாரு? ஓஹோஹோ! என்னங்க! ஆமா...ஆமா... காலையிலேதான்...இப்பத்தான்...குளிக்கக் கூடப்