பக்கம்:கண்ணாயிரத்தின் உலகம்.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

துண்டு

85

மாண்புமிகு மஞ்சுநாதராவ் அவர்களே! இன்று திருநாள்! என் வாழ்நாளிலேயே ஓர் பொன்னாள்! நான் பெருமையும் பூரிப்பும் அடையும் நன்னாள்! ஏழைத் தமிழாசிரியன் இவனுக்கு என்ன தெரியும் என்று பேசினார்கள் பலர். அதிலே சிலர் இங்கே இருக்கக்கூடும்.

[கூட்டத்தில் சிரிப்பொலி கிளம்புகிறது]

அவர்களைக் கேட்கிறேன்...மார்தட்டிக் கேட்கிறேன்...தெரிகிறதா, தமிழாசிரியன் அருமை பெருமை.

[மிக உரத்த குரலில் பேசியதால் இரும நேரிடுகிறது.]

இதோ, என் மாணவன்! நன்மாணவன்! நானிலம் போற்றும் நூல் அளித்த பேராசான்! அவனுக்கு நான் ஆசான்!

[பலத்த கை தட்டுதல் கிளம்புகிறது.]

உலக இலக்கியங்களிலே ஒன்று என்று சான்றோர் அனைவரும் கொண்டாடும் நூலை இவ்வளவு சிறு பிராயத்தில் எழுதிய பாரத்பூஷனை வாழ்த்தாதார் இல்லை; பாராட்டாதார் இல்லை; புதுமைக் குறளாசிரியன், புரட்சி எழுத்தாளன், தமிழ்ச் சங்கக் காவலன், நாவல் போற்றும் நடையுடையான். பாரதன், என் மாணவன். ஆம்! ஆம்! முக்காலும் கூறுவேன், என் மாணவன், பாரத்பூஷணன்! பெயரைக் கேட்ட மாத்திரத்தில் இந்நாட்டவர் அல்லவோ எனத் தோன்றும் இவன் தந்தைக்கும் பெயர் இது போன்றே ராம்லால் என்றுள்ளது. மயங்காதீர். வடவர் அல்ல, நம்மவர், தமிழர்? வணிகத் தொடர்பு ராமலிங்கனாரை, ராம்லால் ஆக்கிற்று—அவர் தம் மகனுக்கு, பாரத்பூஷன் என்று பெயரிட்டார். செந்தமிழ் நாட்டுச் செல்வம் பாரதன்—சேட்டு சௌகார் அல்ல!

[மீண்டும் கைதட்டுகிறார்கள்]

பாரத்பூஷணனுக்கு ஆசிரியனாக இருந்த ஒரு காரணத்தாலேயே நான் இப்போது பெருமையும் பூரிப்பும் அடைகிறேன். இந்தப்பார் முழுதும் பாரதனைப் புகழ்கிறது. புகழ்ந்து-