86
ரொட்டித்
விட்டு, யாரிடம் பயின்றான் என்று கேட்கிறது. கேட்பது முறையன்றோ! கேட்டதும் என்ன கூறுகிறார்கள்? என்ன கூறுவான் பாரத்பூஷண்? அகிலாண்டேஸ்வரி அம்மாளை இயற்றிய அகவலாசிரியன் வரசித்த விநாயகப் புலவர்...
என்றன்றோ கூறுவர்! அதுபோதும்! அதுபோதும், எனக்கு. என் மாணவனை வாழ்த்துகிறேன். ஆசானாம் நானே இத்தனை அகமகிழ்ச்சி கொள்ளும்போது, இவன் தந்தை, திருமிகு ராம்லால் எத்துணை எத்துணை பெருமை அடைவார்! மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி இருப்பாரன்றோ!
[பலத்த கைதட்டுதல்]
காட்சி—6.
இடம்: 'அயோத்தியா' மாளிகை உட்புறக்கூடம்
இருப்: ராம்லால், சுப்புத்தாய், கணக்காளர்.
நிலைமை: ராம்லால் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறார். கடுங்கோபம் கொண்ட நிலையில் காணப்படுகிறார். சுப்புத்தாய் வரக்கண்டு முறைத்துப் பார்க்கிறார்.
விவரம் புரியாமல் சுப்புத்தாய் மிரள்கிறார்கள். ராம்லால் மீண்டும் புத்தகத்தைப் படிக்கிறார் - பதறுகிறார். சுப்புத்தாய், திகைத்துக் கிடக்கக் கண்டு, கணக்காளர், ராம்லாலுக்குத் தெரியாமல் குறி காட்டுகிறார். 'நிற்க வேண்டாம்; உள்ளே சென்று விடுங்கள்' என்று. சுப்புத்தாய் உட்புற தாழ்வாரம் சென்று, கணக்காளரை அழைக்கிறார்கள். இருவரும் மெல்லிய குரலில் பேசிக் கொள்கிறார்கள்.சுப்: என்னய்யா இது, என்னைக்கும் இல்லாத வழக்கமா இருக்குது. வந்ததிலே இருந்து ஏதோ புத்தகத்தை