இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
துண்டு
89
[பேசுபவரின் குரல் கம்மிவிடுகிறது. கூட்டத்தில் இரண்டொருவர் கண்களில் நீர் கசிகிறது. தலைவர் உருக்கமாக, பாரத்பூஷணனைப் பார்க்கிறார். பாரத் பூஷணன் சிறிதளவு திகைத்துக் கிடப்பது போலத் தெரிகிறது. புத்தகத்தை எடுத்துக் காட்டியபடி இளைஞன் பேசுகிறான்.]
இளைஞன்: இதிலன்றி வேறு எதிலே இத்தகைய அருமையான கருத்தைக் காண முடியும்? எப்போது, எங்கே கண்டீர்கள்?
[கை தட்டுகிறார்கள் மகிழ்ச்சியுடன்]
எப்படித்தான் ஏழையின் உள்ளத்தை இவ்வளவு நன்றாகக் கண்டறிந்து ஓவியம் போலத் தீட்ட முடிந்தது! காவியும் தந்தவரோ, குபேரசம்பத்தில் உள்ளவர்—வறுமைத் தேள் கொட்டுவதும், வாழ்வு துடிதுடிப்பதும், எப்படிப் புரிந்தது! எப்படி!
[பலத்த கை தட்டுதல் கேட்கிறது.]
காட்சி—8
இடம்: அயோத்யா மாளிகை உட்புறம்.
இருப்: ராம்லால், சுப்புத்தாயி.
நிலைமை: சிறிதளவு திகிலுடன் நிற்கும் சுப்புத்தாயிடம் கோபமும் கேலியும் கலந்த குரலில் ராம்லால் பேசுகிறார்.ராம்லால்: கேட்டாயடி, கேட்டாயா?
சுப்பு : (சந்தேகம் கொண்ட நிலையில்) நம்ம மகனா இப்படி எழுதினான்?
ராம்: (குத்தலாக) இல்லே, இல்லே! அவன் தூங்கற போது, உக்ஷிணி வந்து எழுதுது. (கோபமாக) பிழைக்கத் தெரியாத சிலதுகள், புரட்சி எழுத்தாளன்னு புகழ்வதற்காக சொந்த தகப்பனாருக்குத் துரோகி ஆகிவிட்டாண்டி, அந்த அயோக்கியப் பய! சுரண்டிப் பிழைக்கும் கை போகியாம்...