140
மா. இராசமாணிக்கனார்
பெருமையால் வாள் எடுத்துக் களம் புகுந்த இரு பேரரசர்களை, நட்புச் செய்யக் கருதிய சான்றோர், இருவரிடத்தும் மாறிமாறிச் செல்வது போல், மாறிமாறிச் செல்லும், அழகிய மலைநாடனே!
'தோழி! காதலனைக் கூடி மகிழவேண்டும் என்ற வேட்கையால் வந்து, தான் செய்யும் குறிப்பை எதிர் நோக்கி, நொச்சிப் பூவிழும் அரவத்தை ஊன்றிக் கேட்கும் காதுகளோடு, நான் காத்திருந்து வருந்தவும், இடி இடிக்கும் இரவின் நள்ளிரவில் வந்து, என்னைப் பார்க்காது வறிதே மீளும்படி, தன்னை ஏமாற்றி விட்டேன் என்று கூறி அவன் மனம் வருந்துகிறான். இதற்கு யான் என் செய்வேன்?
'தோழி! திருமணம் நிகழ்ந்து என் நிலை உயரத் துணைபுரியும் தெய்வங்கட்கு என்னென்ன செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு அவனை எவ்வாறு காண்பது என்ற ஏக்கம் எழ, நான் வருந்தியிருந்தேனாகவும், காட்டுவழிகளை இவள்மீது கொண்டுள்ள அருள் மிகுதியால் கடந்து வரவும் அவள் அன்பைப் பெறமாட்டாது வருந்தினேன் எனப் பலப்பல கூறுகின்றான். இதற்கு யான் என் செய்வேன்?
'தோழி! மழைத்துளியை விரும்பும் வானம்பாடி எப்பொழுதும் அவ்வானத்தையே பாடிப் பறப்பது போல், நான் அவன் அன்பின்பால் ஆசைகொண்டு, அவன்மீது மாறாக் காதலுடையேனாகவும், மழை பெய்யும் இடையாமத்தில் வந்து, குறியிடத்தில் உன்னைக் காண முடியாமையால், அதை என் பிழையாக்கி, உன்பால் குறை கூறுகின்றான். இதற்கு யான் என் செய்வேன்?'
- என்றெல்லாம் கூறிப் புலம்புமாறு இவள் காமநோய் பெருகிவிடவே அக்கவலையால் தூக்கம் இல்லாமல் துயர்கொள்ளும் என்மீது அக்குற்றத்தை ஏற்றிவிட்டால், உன் நாட்டுப் பக்கமலைகள், தம் எதிர் நின்று கூறுவார் கூறுவனவற்றையே எதிர் ஒலித்தல் போல், நீ கூறுவதையே கூறும் இவள் காமநோயை, நீ உரைக்கும் அப்பொய்யே போக்கி, உனக்கு வெற்றியை உண்டாக்கும் அதை இன்றே செய்வாயாக!
மாஅல்-பெருமை. சிறை-சிறகு. ஒருத்தல்-யானைத் தலைவன். உழுவை-புலி. நயன்நாடி-நட்பாக்கும் வழியை ஆராய்ந்து. வினைவர்-சான்றோர். மறிதரும்-மாறி மாறித் திரியும். அயம்-பள்ளம். ஏறு-இடி. பதம்-காணும் வாய்ப்பு. குரல்-கொத்து.