கலித்தொகை - குறிஞ்சிக் கலி
141
பாடு-ஒலி. ஓர்க்கும்-நுணுகிக் கேட்கும். பைதல்-துன்பம். வாய்விடுஉம்-வாய் திறந்து கூறும். கடம்-விரதம். துளி-மழைத்துளி. மிசை-வானம். நசைஇ-விரும்பி. சிலம்பு-பக்கமலை. எல்-ஒளி.
உள்ளுறை: பூ, திருமணம். விடுத்துச் சென்ற தும்பி, மணம் செய்து கொள்ளக் கருதாத தலைவன்; தும்பி, புலியிடத்தும் யானையிடத்தும் திரிதல், தலைவன், இரவுக்குறி பகற்குறிகளை இன்பம் தருவனவாகக் கொண்டு உழலல்.
11. பெண்மையும் அன்று!
இளைஞன் ஒருவன் ஒரு பெண்ணைக் காதலித்தான். அவளுக்கும் அவன்மீது காதல் உண்டு. ஆயினும் தம் காதல் நிறைவேற வேண்டுமாயின் அதற்கு அவள் தோழியின் துணை வேண்டும் என்பதை அறிந்துகொண்ட இளைஞன், அவள் துணையை வேண்டினான். அவனுக்குத் துணைபுரிய வாக்களித்த தோழி, அப்பெண்ணிடம் சென்று அவனை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக்கொண்டது இது:
"ஒன்று, இரப்பான் போல், எளிவந்தும் சொல்லும், உலகம்
புரப்பான் போல்வதோர் மதுகையும் உடையன்;
வல்லாரை வழிபட்டு ஒன்று அறிந்தான் போல்,
நல்லார்கண் தோன்றும் அடக்கமும் உடையன்;
இல்லோர் புன்கண் ஈகையில் தணிக்க
5
வல்லான் போல்வதோர் வன்மையும் உடையன்;
அன்னான் ஒருவன், தன் ஆண்தகை விட்டு, என்னைச்
சொல்லும் சொல் கேட்டீ, சுடர் இழாய்! பன்மாணும்
நின் இன்றி அமையலேன் யான்' என்னும் அவனாயின்
அன்னான் சொல் நம்புண்டல் யார்க்கும் இங்கு அரிதாயின்
10
என்உற்ற பிறர்க்கும் ஆங்கு உளகொல்லோ? நறுநுதால்!
'அறியாய் நீ வருந்துவல் யான்' என்னும் அவனாயின்,
தமியரே துணிகிற்றல் பெண்டிர்க்கும் அரிதாயின்,
அளியரோ எம்போல ஈங்கு இவன் வலைப்பட்டார்!
'வாழலேன் யான்' என்னும் நீ நீப்பின் அவனாயின்
15