பக்கம்:கலித்தொகை 2011.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை - குறிஞ்சிக் கலி

143


குறித்து, ஊரார், 'இவள் போன்ற மகளிர் உண்மையில் பேதையரே' எனக்கூறுவது நமக்குப் பழியாம். ஆதலின், இந்நிலை குறித்து நாம் இருவரும் ஒன்று கூடி ஆராய்ந்து பார்ப்போமா?

நம் நாண் அழியும்படி, அவன் முன்னே சென்று, நில்லாதே போ எனக் கூறித் துரத்துவதும் இயலாது. அயலான் ஒருவனை ஏற்றுக்கொண்டனர் என்று ஊரார் இழித்துக் கூறுதல் நம் பெண்மைக்கும் பொருந்தாது. அவனோ, நம்மைக் கைப்பற்றத் துணிந்து விட்டான். ஆனால், நெஞ்சே! அதற்கு இவள் இசைந்திலன்; ஆகவே, நீ அவனை வருக என நான் கூறுவது போல் குறிப்புக்காட்டி, அவன் விரும்பும் இடத்திற்கு விரும்பிச் செல்வாயாக!

மதுகை-வன்மை. புன்கண்-துன்பம். பன்மாணும்-பலகாலும். அளியர்-இரங்கத்தக்கார். நீப்பின்-கைவிடின். ஏழ்மை-அறிவுக் குறைபாடு. அட-வருத்த. பெயர்த்தல்-போக்குதல். ஒல்லாது-பொருந்தாது. வெளவுதல்-மேற்கொள்ளுதல். மேஎவழி-தங்கி உள்ள இடம். மேவாய்-சென்று சேர்வாயாக.

12. மலையினும் பெரிதே!

காதலித்த ஒருத்தியை வரைந்து கொள்ளக் கருதாது வாழ்ந்திருந்தான் ஒரு கட்டிளங் காளை. அதனால் அப்பெண் பெரிதும் வருந்தினாள். ஊரார் அவளைப் பழிக்கவும் தலைப்பட்டனர். அது கண்ட அவள் தோழி, அவனிடம் சென்று விரைந்து வந்து மணம் செய்து கொள்ளுமாறு வேண்டிக்கொண்டது இது.

“ஆம் இழி அணிமலை அலர்வேங்கைத் தகைபோலத்
தேம் மூசு நனைகவுள், திசை காவல் கொளற்கு ஒத்த,
வாய் நில்லா வலி முன்பின், வண்டு ஊது புகர்முகப்
படுமழை அடுக்கத்த, மாவிசும்பு ஓங்கிய
கடிமரத் துருத்திய, கமழ்கடாம் திகழ்தரும் 5

பெருங்களிற்று இனத்தொடு வீங்கு எருத்து, எறுழ் முன்பின் இரும்புலி மயக்குற்ற இகன்மலை நன்னாட!
வீழ்பெயல் கங்குல் நின் விளி ஓர்த்த ஒடுக்கத்தால்
வாழும் நாள் சிறந்தவள் வருந்து தோள் தவறுண்டோ?
தாழ்செறி கடுங்காப்பின் தாய் முன்னர் நின்சாரல் 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/144&oldid=1777497" இலிருந்து மீள்விக்கப்பட்டது