150
மா. இராசமாணிக்கனார்
காதலைத் தானும் ஏற்றுக்கொண்டதை, ஒரு பெண், தன் தோழிக்குத் தெரிவித்தது இது:
சுடர்த் தொடீஇ! கேளாய்; தெருவில் நாம் ஆடும்
மணற்சிற்றில் காலிற் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து, வரிப்பந்து கொண்டோடி,
நோதக்க செய்யும் சிறுபட்டி, மேலோர் நாள்,
அன்னையும் யானும் இருந்தேமா, "இல்லீரே!
5
உண்ணுநீர் வேட்டேன்" என வந்தாற்கு, அன்னை,
“அடர் பொன் சிகரத்தால் வாக்கிச், சுடர் இழாய்!
உண்ணுநீர் ஊட்டிவா” என்றாள்; என யானும்,
தன்னை அறியாது சென்றேன்; மற்று, என்னை
வளைமுன்கை பற்றி நலியத். தெருமந்திட்டு,
10
"அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண்!" என்றேனா;
அன்னை அலறிப் படர்தரத், தன்னையான்
“உண்ணுநீர் விக்கினான்” என்றேனா; அன்னையும்
தன்னைப் புறம்பழித்து, நீவ, மற்று, என்னைக்
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி,
நகைக்கூட்டம்
15
செய்தான் அக் கள்வன் மகன்.”
தோழி! நான் கூறும் இதைக் கேள்; தெருவில் மணல் வீடு கட்டி ஆடும் அக்காலத்தில் வீட்டைக் காலால் அழித்தும், கூந்தலில் சூடியிருந்த மலர்களைப் பறித்துப் பாழாக்கியும், பந்தைக் கவர்ந்து ஓடியும், மனம் நோவத்தக்கனவற்றையே செய்யும் கொடியவனாகிய அச்சின்னம் சிறு பட்டி மகன், முன்னொரு நாள் அன்னையும் நானும் இருக்கும்போது எம்மனைக்கு வந்தான். வந்து, 'வீட்டோரே! நீர்வேட்கை உடையேன்; உண்ணுநீர் தாருங்கள்' எனக்கேட்டான். தாய், 'மகளே! பொன்னாலான கலத்தில் மொண்டு சென்று நீர் ஊட்டி வா' எனப் பணித்தாள். நானும், அவன் இன்னான் என்பதை அறியாமலே தண்ணீர் கொண்டு சென்றேன். தோழி! அப்போது அவன் என்ன செய்து விட்டான் தெரியுமா? திடுமென வளையல் அணிந்த முன் கையைப் பிடித்து வருத்தத் தொடங்கிவிட்டான். எதிர்பாராதவாறு இவ்வாறு செய்து விடவே, நடுங்கி, 'தாயே! இவன் செய்ததை வந்து பாரேன்' எனக்-