பக்கம்:கலித்தொகை 2011.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை - குறிஞ்சிக் கலி

153


அவர்கள் இவ்வாறு கருதாமல் உண்மை நிலையை உணர்ந்து கொண்டால் இவள் உயிர் வாழாள், உலகத்தவர் அனைவராலும், புகழப்படும் உயர்ந்தோனே! அவள் மட்டுமன்று; நானும் உயிர் வாழேன். அதனால், விடியற் காலத்தில் வந்து, இவள் பெற்றோரைக் கண்டு பேசித் திருமணத்தை முடித்து விடுதல் வேண்டும். அப்போது புதியவன் போல் வரும் உன் வருகையையும், தலை குனிந்து நிற்கும் இவள் நிலையையும் கண்டு நான் மகிழ்தல் வேண்டும்.

செற்று-சினந்து. குறங்கு-துடை. மடுத்து-குத்தி. நிறம்-மார்பு. சாடி-திறந்து. நனம்-அகன்ற. எல்லி-இருள். மாலை-இயல்பு. ஞெகிழி-தீப்பந்தம். கறி-மிளகு. ஓர்க்கும்-கருதும். விலங்கு-பிறிது ஒன்றாக. ஓரார்-கருதாராய்.புலம்-அறிவு. ஒருவ-ஒப்பற்றவனே. பொதி அவிழ்-மலர்கின்ற.

உள்ளுறை: செவி மறையப் பாய்ந்த புலி, களவொழுக்கம் காரணமாக அலர் உரைத்த ஊரார், புலியை வென்ற ஊரார், புலியை வென்ற யானை மணந்து கொள்வதால், அலரை அடக்கிய தலைவி யானை தன் கிளையோடு கலந்து செல்லுதல், தலைவி, மணந்து தலைவன் மனை புகுந்து, சுற்றத்தாரிடையே மகிழ்ந்து வாழ்தலாம்.

17. நந்தும் கவின்!

ர் இளைஞன் ஒரு பெண்ணைக் காதலித்தான். சில நாள் கழித்துச் சென்றவன், விரைவில் திரும்பவில்லை. அப்பெண் அதனால் கவலையுற்றாள்; ஊரார் பழிகூறவும் தொடங்கினர். அதனால் அவள் மேலும் வனப்பிழந்தாள். அவள் வாட்டத்தைப் போக்க விரும்பினாள் தோழி. உடனே இளைஞனைக் கண்டு, நிலைமையைக்கூறி, நீ வந்து வரைந்து கொண்டால், அவள் வாட்டம் நீங்கும் என்று கூறியது இது:


"வறன் உறல் அறியாத வழைஅமை நறும் சாரல்
விறல்மலை வியல் அறை வீழ்பிடி உழையதா
மறம் மிகு வேழந்தன் மாறுகொள் மைந்தினால்
புகர்நுதல் புண்செய்த புய்கோடு கோல
உயர்முகை நறுங்காந்தள் நாள்தோறும் புதிதுஈன, 5

அயம் நந்தி அணிபெற அருவி ஆர்த்து இழிதரும்
பயமலை தலைஇய பாடுசால் விறல் வெற்ப!
மறையினில் மணந்து ஆங்கே மருவறத் துறந்தபின்
இறைவனை நெகிழ்பு ஓட ஏற்பவும் ஒல்லும் மன்,
அயல் அலர் தூற்றலின் ஆய்நலன் இழந்த கண் 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/154&oldid=1778638" இலிருந்து மீள்விக்கப்பட்டது