பக்கம்:கலித்தொகை 2011.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

மா. இராசமாணிக்கனார்


கயல் உமிழ் நீர் போலக் கண்பனி கலுழாக்கால்,
இனிய செய்து அகன்றுநீ இன்னாதாத் துறத்தலின்,
பனி இவள் படர் எனப் பரவாமை ஒல்லும் மன்;
ஊர் அலர் தூற்றலின் ஒளிஓடி, நறுநுதல்
பீர்அலர் அணிகொண்டு பிறைவனப்பு இழவாக்கால்; 15

அஞ்சல் என்று அகன்று நீ அருளாது துறத்தலின்,
நெஞ்சழி துயர்அட நிறுப்பவும் இயையும் மன்;
நனவினால் நலம் வாட நலிதந்த நடுங்கு அஞர்,
கனவினால் அழிவுற்றுக் கங்குலும் ஆற்றாக்கால்;
எனவாங்கு, 20

விளியா நோய் உழந்து ஆனா என் தோழி நின்மலை
முளிவுற வருந்திய முளைமுதிர் சிறுதினை
தளிபெறத் தகை பெற்றாங்கு, நின்
அளிபெற நந்தும் இவள் ஆய்நுதல் கவினே."

மழை பெறாமையால் எக்காலத்திலும் வறண்டு போகாத, சுரபுன்னை மரங்கள் வளர்ந்த, உயர்ந்த மலையில் அகன்ற பாறையில், பிடி யானை தன் பக்கத்தில் இருப்பதால், மறவுணர்வை மிகுதியாகப் பெற்ற ஒரு வேழம், தன்னைப் பகைக்கும் பிற வேழங்களின் நெற்றி புண்படுமாறு, குத்தி வாங்க, இரத்தக்கறை படிந்த அதன் கோடு போன்ற பெரிய அரும்புகளை, காந்தட் செடி, நாள்தோறும் ஈனவும் பள்ளங்கள் நீரால் நிறையவும் அருவிகள் ஓ என ஒலித்து ஓயாது விழவும், பெரு மழை வந்து பெய்யும், பெருமை வாய்ந்த மலை நாட்டு மன்னனே!

அண்டை அயலில் வாழ்பவர் அலர் கூறித் தூற்றுவதால், தம் அழகை இழந்த இவள் கண்கள், கயல்மீன், நீரை உமிழ்வது போல், கண்ணீரைச் சொரியாதிருக்குமாயின், பிறர் அறியாது வந்து இவளைப் புணர்ந்து புணர்ந்த அப்போதே, அப்புணர்ச்சி இன்பம் அழிந்து போகும்படி நீ கைவிட்டுச் சென்ற பிறகும், வளைகள் கழன்று ஓடவும், வருத்தத்தைத் தாங்கி உயிர் வாழ்தல் இவளால் இயலும்; ஆனால், அதற்கு அக்கண்கள் துணை புரிந்திலவே! என் செய்வோம்?

ஊரார் அலர் கூறித் தூற்றுவதால் இவள் நெற்றி, ஒளி இழந்து பீர்க்கம் பூப்போலாகி பிறைத் திங்கள் போன்ற பேரழகையும் இழக்காதிருக்குமாயின், தொடக்கத்தில் இனிமை செய்து விட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/155&oldid=1778639" இலிருந்து மீள்விக்கப்பட்டது