பக்கம்:கலித்தொகை 2011.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

மா. இராசமாணிக்கனார்


18. அல்லல் களைந்தனன்!

யர் குணம் வாய்ந்த ஒரு பெண் ஓர் இளைஞனிடம் காதல் கொண்டிருந்தாள். அதை அறியாத பெற்றோர் அவளை வேறு ஒருவனுக்கு மணம் முடிக்க எண்ணினர். அஃதறிந்த அவள், உடனே தன் தோழியை அழைத்துத் தன் காதலை உரைத்து, 'இதை என் பெற்றோர்க்கு உணர்த்தி நான் அவனையே மணக்க வழி வகுத்து என் கற்பைக் காப்பாற்றுவாயாக' என்றது இது:

"கொடியவும் கோட்டவும் நீரின்றி நிறம்பெறப்
பொடிஅழல் புறந்தந்த பூவாப்பூம் பொலன் கோதைத்,
தொடிசெறி யாப்பு அமை அரிமுன்கை, அணைத் தோளாய்!
அடியுறை அருளாமை ஒத்ததோ நினக்கு?' என்ன,
நரந்தம்நாறு இருங் கூந்தல் எஞ்சாது நனிபற்றிப் 5

பொலம்புனை மகரவாய் நுங்கிய சிகழிகை
நலம் பெறச் சுற்றிய குரலமை ஒருகாழ்
விரல் முறை சுற்றி மோக்கலும் மோந்தனன்;
நறாஅ அவிழ்ந்தன்ன என்மெல் விரற்போது கொண்டு
செறாஅச் செங்கண் புதைய வைத்துப் 10

பறாஅக் குருகின் உயிர்த்தலும் உயிர்த்தனன்;
தொய்யில் இளமுலை இனிய தைவந்து
தொய்யலம் தடக்கையின் வீழ்பிடி அளிக்கும்
மையல் யானையின் மருட்டலும் மருட்டினன்;
அதனால், 15

அல்லல் களைந்தனன்; தோழி! நம்நகர்
அருங்கடி நீவாமை கூறின் நன்று என
நின்னொடு சூழ்வல் தோழி! நயம் புரிந்து
‘இன்னது செய்தாள் இவள்' என
மன்னா உலகத்து மன்னுவது புரைமே." 20

'நீர் இல்லாமல் நிறம் மட்டும் நிற்கும்படி, கொடியிலும் கொம்பிலும் மலரும் மலர் வடிவாக நெருப்பில் இட்டுப் பண்ணிய பொன் மலர் மாலையையும், தொடிகள் கழலாவாறு கட்டு வடம் அமைந்த கையினையும், மூங்கில் போன்ற தோளையும் உடையவளே! நான் உன்னிடம் அன்பு கொண்டு உன் அடியின் கீழ்வாழ நீ அருள் புரியாதிருப்பது உனக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/157&oldid=1782271" இலிருந்து மீள்விக்கப்பட்டது