கலித்தொகை - குறிஞ்சிக் கலி
165
ஆருயிர் வௌவிக்கொண்டு அறிந்து ஈயாது இறப்பாய் கேள்
உளனாஎன் உயிரைஉண்டு உயவுநோய் கைம்மிக,
இளமையான் உணரா தாய்! நின்தவறு இல்லானும்,
களைநர்இல் நோய்செய்யும் கவின்அறிந்து அணிந்துதம்
வளமையால் போத்தந்த நுமர்தவறு இல்லென்பாய்!
10
நடைமெலிந்து அயர்வுறீஇ நாளும்என் நலியும்நோய்
மடமையான் உணராதாய்! நின்தவறு இல்லானும்,
இடைநில்லாது எய்க்கும் நின்உருவறிந்து அணிந்துதம்
உடைமையால் போத்தந்த நுமர்தவறு இல்லென்பாய்!
அல்லல்கூர்ந்து அழிவுற அணங்காகி அடரும்நோய்,
15
சொல்லினும் அறியாதாய்! நின்தவறு இல்லானும்,
ஒல்லையே உயிர்வெளவும் உருவறிந்து அணிந்துதம்
செல்வத்தால் பேரத்தந்த நுமர்தவறு இல்லென்பாய்!
எனவாங்கு,
ஒறுப்பின், யான்ஒறுப்பதுநுமரை; யான் மற்றுஇந்நோய்
20
பொறுக்கலாம் வரைத்தன்றிப் பெரிதாயின், பொலங்குழாய்!
மறுத்துஇவ்வூர் மன்றத்து மடல்ஏறி,
நிறுக்குவென் போல்வல்யான் நீ படுபழியே."
வாரி முடித்த கூந்தலும், வளைந்த முன்கையும், நீண்ட மெத்தென்ற தோளும், மலர் போலும் மைதீட்டிய கண்களும், பெண்மான் அழகும் மருண்ட பார்வையும், மாந்தளிர் போன்ற மேனியும், அழகு பெற்று ஒளி வீசும் நெற்றியும், முல்லை அரும்பு போன்ற வெண்பற்களும், மலர்க்கொடி போன்ற இடையும் உடையவளே! சிலம்புகள் ஒலிக்க, வளையல் நிறைந்த கைகளை வீசியவாறே, பெறுதற்கரிய என் உயிரைக்கவர்ந்து கொண்டு அவ்வாறு கவர்ந்து கொண்ட உன் கொடுமையை உணராமல் செல்கின்றவளே! நான் கூறுவதைச் சற்றே நின்று கேட்பாயாக!
துயர் தரும் காமநோய் கை கடந்து பெருகும்படி நடைப்பிணமாய் நான் வாழ, என் உயிரைக் கவர்ந்து கொண்டு, கவர்ந்துகொண்ட அக்கொடுஞ் செயலை, உன் இளமையால் உணராமல் போகின்றவளே! உன்னிடத்தில் தவறு இல்லை என்றாலும், தணித்தற்கரிய காமநோய் தரும் அழகினை இயல்பாகவே பெற்றுள்ளாய் என்பதை அறிந்திருந்தும், செல்வச்