170
மா. இராசமாணிக்கனார்
மற்று இந்நோய்தீரும் மருந்தருளாய்; ஒண்தொடீ!
நின்முகம் காணும் மருந்தினேன் என்னுமால்;
நின்முகம் தான்பெறினல்லது, கொன்னே
20
மருந்து பிறிதுயாதும் இல்லேல், திருந்துஇழாய்!
என்செய்வாம்கொல் இனி நாம்?
பொன்செய்வாம்;
ஆறுவிலங்கித் தெருவின்கண் நின்று, ஒருவன்
கூறும்சொல் வாய் எனக் கொண்டு, அதன் பண்பு
உணராம்
25
தேறல் எளிது என்பாம் நாம்;
ஒருவன் சாமாறு எளிது என்பாம் மற்று;
சிறிதுஆங்கே; மாணாஊர் அம்பல்அலரின் அலர்கென,
நாணும் நிறையும் நயப்பில் பிறப்பிலி;
பூணாகம் நோக்கி, இமையான் நயந்துநம்
30
கேண்மை விருப்புற் றவனை எதிர்நின்று,
நாண்அடப், பெயர்த்தல் நயவர வின்றே."
தோழி: தேமல் படர்ந்த கொங்கை, நிலவொளி வீசும் நெற்றி, மணம் நாறும் மலர்மாலை, கருமை மிகுதியால் மேகமும் விரும்பும் கூந்தல், நுணுகி நோக்குவார்க்கு மட்டுமே புலப்பட்டு அவர் அறிவை மயக்கும் இடை, வளையல் அணிந்த முன்கை, வரிக்கோடு விளங்கும் அல்குல் ஆகிய உறுப்பு நலம் உடையவளே!
இனிக்கும் நகையினை உடையவளே! ஓர் இளைஞன், என்னைப் பார்த்து, 'அழகிய அணிகளை உடையவளே! கண்ணுக்கு நிறைந்த அழகினை உடைய பெண்களைப் பார்த்தவர்க்கு, மனத்தில் காமநோய் பெருகும்படி, அவர் உயிர் அவரை விட்டு விரைந்து பிரிந்து போவது போன்ற கொடிய துன்பத்தைத் தருவது, பெண் தன்மையன்று' எனக்கூறிவிட்டு, உன்னைப் பார்த்து வணங்குவான்; வணங்கி கண்கலங்க நின்று வருந்துவான். எங்கிருந்தோ வந்த இவன், ஆண் யானை போன்ற தன் ஆண் தன்மையை இழந்து, உள்ளம் உடைந்து, உள்ளுக்குள்ளாகவே உருகுவான்போல் தோன்றுகிறான்; இவன் இங்கு வந்து என்ன செய்து விட்டான் பார்த்தனையா?