172
மா. இராசமாணிக்கனார்
உறீஇய-செய்த. அஞர்-மனக்கவலை. எவ்வம்-துயரம். பொன் செய்வாம்-காதலனைப் பெற்றுப் பேரழகு பெறுவாம். சிறிது ஆங்கே-இறந்து படுதல் இல்லை. நயப்பு இல்-விரும்பாதவன். நய வரவு இன்று-பொருந்தாது.
25. நாண் இலன்!
வளம் மிக்க குடியில் வந்த ஓர் இளைஞன், செல்வக் குடியில் பிறந்த சிறந்த ஓர் அழகியிடம் காதல் கொண்டு, அவள் காதலை அடைய அவள் தோழியின் துணையை நாடினான். அவனோடு சிறிது நேரம் உரையாடி அவனது உண்மைக் காதலை உணர்ந்து கொண்ட அத்தோழி, அப்பெண்ணை அடைந்து, அவன் காதலை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக்கொண்டது இது:
‘எல்லா! இஃது ஒத்தன், என்பெறான்? கேட்டைக்காண்;
செல்வம் கடைகொளச் சாஅய்ச், சான்றவர்,
அல்லல் களைதக்க கேளிர் உழைச்சென்று,
சொல்லுதல் உற்று, உரைக்கல்லா தவர்போலப்,
பல்லூழ் பெயர்ந்து என்னைநோக்கும், மற்றுயான் நோக்கின்
5
மெல்ல இறைஞ்சும் தலை.
எல்லா! நீ, முன்னத்தான் ஒன்று குறித்தாய்போற் காட்டினை,
நின்னின்விடாஅ நிழல்போல் திரிதருவாய்;
என்நீ பெறாதது? ஈது என்?
சொல்லின், மறாது ஈவாள்மன்னோ இவள்?
10
செறாஅது ஈதல் இரந்தார்க்கு ஒன்று ஆற்றாது வாழ்தலின்
சாதலும் கூடுமாம் மற்று.
இவள்தந்தை காதலின் யார்க்கும் கொடுக்கும் விழுப்பொருள்;
யாதுநீ வேண்டி யது?
பேதாய்! பொருள்வேண்டும் புன்கண்மை ஈண்டில்லை;
யாழ
15
மருளி, மடநோக்கின் நின்தோழி, என்னை
அருளியல் வேண்டுவல் யான்;
அன்னையோ, மண்டமர் அட்ட களிறு அன்னான்தன்னை, ஒரு
பெண்டிர் அருளக் கிடந்தது எவன்கொலோ?
ஒண்தொடீ! நாண்இலன் மன்ற; இவன்,
20