174
மா. இராசமாணிக்கனார்
மடப்பம் மிக்க பார்வையுடையவளாகிய உன் தோழி என்னிடம் அருள்கொண்டு, அவள் காதலை எனக்கு அளித்தல் வேண்டும். அதையே நான் வேண்டுகிறேன்.
தோழி: ஓ ! பெரிய போர்க்களத்தில் பகைவரைக் கொன்று அழிக்கும் யானை போன்ற ஆற்றல் மிக்க ஒருவனை, ஒரு பெண் அருள் பண்ணிக்காக்க வேண்டிய நிலை இருந்தவாறு என்னே!
தோழி தலைவியை நோக்கிக் கூறியது: ஒள்ளிய தொடி அணிந்தவளே! இவன் மிகவும் நாண் கெட்டவன் போலும்! நாம் அவனைப் பலமுறை எள்ளி நகைப்பினும், அதைப் பொருட்படுத்தாது மீண்டும் மீண்டும் வருகிறான்; வந்து என்னோடு உரையாடிக் கொண்டிருக்கும் போதே, இடை இடையே, ஒரு பொருளைக் களவாடக் கருதியவர் கவரும் வரை அதைப் பார்க்காதவர்போல் பார்த்துக்கொண்டே இருப்பது போல், உன்னை நோக்காமல் நோக்குவான்; நம் தந்தையின் உள்ளம் நிறையுமளவான பெரும் பொருளைக் கொடுத்து, உன் காதலைப் பெறாமல் போகாத, பிடிவாத குணம் உடையவன் போலவும் தோன்றுகிறான். 'இவள் என்னிடம் அன்பு கொள்ளாது மறுத்துவிட்டால், பலரும் இவளைப் பழிக்கும் வண்ணம், பனை மடலால் பண்ணிய குதிரைமீது அமர்ந்து, செல்வம் கொழிக்கும் இவள் சிற்றூர்ப் பொதுவிடத்தில் வந்து நிற்பேன்' எனக் கூறிச் செல்வான்; ஆகவே, பெண்ணே! அவன் காதலை ஏற்றுக் கொள்வதே நல்லது! அதில் இழுக்கும் இல்லை?
எல்லா-ஏடி. இஃது ஒத்தன்-இவன் ஒருவன். கடைகொள- அழிந்து போக. சாஅய்-வறுமையுற்று. உரைக்கல்லாதவர்- சொல்ல முடியாதவர். பல்லூழ்-பலமுறை. முன்னம்-குறிப்பு. மருளி-மருண்டு. அருள்ஈயல்-அருள் செய்தல். கண் மாறிவிடின்-மறந்து விடின். ஏஎ-இகழ்ச்சிப்பொருள் உணர்த்தும் ஓர் இடைச்சொல்.
26. பிறர்க்கின்னா செய்வது நன்றாமோ?
தான் காதலிக்கும் ஒரு பெண்ணுக்கும் தன்னிடம் காதல் பிறக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்ற ஒழுக்கமுறை உணராத ஓர் இளைஞன், ஒரு பெண்ணிடத்தில் காதல் கொண்டான். அவளுக்குத் தன்னிடத்தில் காதல் பிறக்கும் வரை காத்திருக்க அவனால் முடியவில்லை. அதனால், ஒருநாள் அவளை