பக்கம்:கல்வத்து நாயகம் (கவிதைகள்).pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஜாம்பவான்கள், கவிஞரேறுகளின் கட்டுரைகள், கவிதைகள் அடங்கியசதாவதானி செய்குதம்பிப் பாவலர்என்ற சீரிய தொகுப்பு நூல் ஒன்றினை, அவர்களின் நினைவாக தமிழ்நாடு அரசு உருவாக்கிய மணிமண்டபத் திறப்பு விழாவினை யொட்டி வெளிக் கொணர்ந்தோம்.

'இலக்கியப்பேழை'யின்மறுபதிப்பும்'நாதாவே நாயகமே' என்ற கவிதை நூலும் அண்மையில் வெளி வந்தன. இப்போது கல்வத்து நாயகம் இன்னிசைப் பாமாலையின் மூன்றாம் பதிப்பு இறையருளால் வெளிவருகிறது.

சதாவதானி பாவலர் அவர்களின் கல்வத்து நாயகம் இன்னிசைப் பாமாலை கவிதைகளைத் தொடர்ந்து மேலப் பாளையம் காளை ஹசன் அலிப் புலவர் அவர்களின் கல்வத்து மாலையும் அதைத் தொடர்ந்து மேலப்பாளையம் ஜமால் ஸெய்யிது முஹம்மது ஆலிம் சாஹிபு அவர்களால் சொல்லப் பட்ட கல்வத்து நாதா பாடல்களும் இதே நூலின் பிற்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளன.

கீழக்கரையில் வாழ்ந்திருந்த கல்வத்து ஆண்டகை, அவர்களின் சிறப்புணர்த்தும் சீரிய நூலின் இந்த மூன்றாம் பதிப்பு வெளிவரத் துணை நின்ற நல்லோர் எல்லோருக்குமே நன்றியை உரித்தாக்குகிறோம்.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

20—1–1990,
சென்னை-1

கே.பி.செய்குதம்பி
"பதிப்பாசிரியர்"

கீழக்கரை

கல்வத்து நாயகமவர்கள்

இன்னிசைப் பாமாலை

* * * * * *

காப்பு

நேரிசை வெண்பா

செல்வத்துட் செல்வமெனச் சீர்கெழுகி ழக்கரைவாழ் கல்வத்து நாயகத்தின் கண்ணியமே-பல்விதத்து மல்கவரு மின்னிசைப்பா பாலை சொல வாய்ந்தவருள் நல்கவரு மென்னிறையோ னட்பு.

கொச்சகக் கலிப்பா

அற்பூர நும்மடிக்கே
யஞ்சவித்த நெஞ்சினொடு
பொற்பூர வின்னிசைப்பாப்
பூட்டிமகி ழீட்டேனோ
இற்பூர வன்பருளத்
தேற்றிவைத்துப் போற்றுமொரு
கற்பூரத் தீபமொத்த
கல்வத்து நாயகமே!

விண்கண்ட வாதவன் போல்
மேதினியெ லாம்விளக்கிப்
பண் கண்ட நும்மருட்சீர்
பாவியேன் பாடேனோ
திண்கண்ட வாய்மைமிகு
செய்யிதப்துல் காதிறெனுங்
கண்கண்ட சற்குருவே
கல்வத்து நாயகமே!