பக்கம்:களத்துமேடு.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

களத்து மேடு

இப்போது சேர்வை மூச்சைப் பிடித்துக் கொண்டு எழும்பினார். “கை கழுவுங்க ரெண்டு பேரும்! ...” என்று அவர்களைப் பார்த்துச் சொல்விய கையோடு, மகளை நோக்கி, “ஆத்தா, இவுகளுக்குச் சோறு போடு,” என்றும் தெரிவித்தார். குற்றவாளியானவன் நீதிபதியின் தீர்ப்பை எதிர் நோக்கித் தத்தரிக்கும் பாவனையில் அவர் மனம் அடித்துக் கொண்டது. சரவணனைப் புதிய பார்வையோடு பார்க்கலானான் சிங்காரம்.

“நான் ஊருக்குப் போகவேணும். நேத்து மாதிரி இண்ணக்கும் நேரம் தப்பிப்போனா, வீட்டிலே கோவிச்சுப்பாங்க,” என்றான் சரவணன்.

சேர்வைக்குத் ‘திக்’ கென்றது, சரவணனின் இம்முடிவைக் கேட்டு.

“சரவணன் சாப்பிடாட்டி நானும் சாப்பிடுறது அம்புட்டு உசிதமாயிருக்காதுங்க,” என்று கூறினான் சிங்காரம்.

சிங்காரத்தின் பேச்சும் சேர்வைக்கு மலைப்பைத் தந்தது.

தூணுக்கு அணையாக நின்ற தைலம்மை தொண்டையைக் கனைத்துக் கொண்டாள். “விருந்தாடிங்க ரெண்டு பேரும் இப்பைக்குச் சாப்பிடாட்டி, நாங்களும் சாப்பிடப் போறதில்லே!” என்று தெரிவித்தாள். அவள் குரலில் ஓர் அழுத்தம் இருந்தது.

தைலம்மையின் முடிவைக் கேட்டதும், சரவணணும் சிங்காரமும் ஒருவரையொருவர் திகைப்போடு நோக்கிக் கொண்டார்கள்.

“நீ சாப்பிட்டுப் போகலாம், சரவணா! நம்ம தவசல் நம்மோடே இருக்கட்டும்; இப்போதுள்ள நிலைமையிலே நீதான் முதல் விருந்தாடி. ஆனதாலேதான், நானும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/101&oldid=1386211" இலிருந்து மீள்விக்கப்பட்டது