பக்கம்:களத்துமேடு.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

97

“நான் இங்கிட்டு வெளித் திண்ணையிலேயே படுத்துக் கிடப்போறேனுங்க, அம்மான்!” என்று சிங்காரம் சொன்னதையும், அதற்கு “இது எப்பவும் ஒன் வூடு, சிங்காரம். என்னைக் கேட்கிறதுக்கு நீ அந்நியமோ அசலோ இல்லையே?... நல்லாப் படுத்துக்க. குளிருக்குப் போத்திக்கிடுறதுக்கு கெட்டித் துணி கொண்டாரேன்,” என்று தன் தகப்பன் ஆமோதித்ததையும் காதுகளில் வாங்கிக் கொள்ள தைலம்மை தவறவில்லை!

கூதல் காற்று அடிக்கத் தலைப்பட்டது.

கதிர்க் கொத்து 10
காவடி

லஞ்சிரான் காட்டுப் புண்ணிய பூமியிலிருந்து ஆந்தையொன்று காட்டுக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தது.

அந்தச் சத்தம் தைலம்மையின் அடிமனத்தில் எதிரொலித்தது.

அரிக்கன் விளக்கை அமர்த்தி விட்டு, சுவர் விளக்கைக் கொளுத்தி வைத்துக்கொண்டு, அதன் முன்னே சோற்று வட்டியையும் நகர்த்திக் கொண்டு கால்களை மடக்கிப் போட்டு உட்கார்ந்திருந்தாள் அவள்; சோற்றைப் பிசைந்து கொண்டிருந்தாளேயொழிய, சோற்றுக் கவளத்தை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளவில்லை. தீவிரமான யோசனைக்கு ஆட்பட்டவள் போன்று அவள் முகம் விளங்கியது. மன உளைச்சலின் பிரதிபலிப்பாக அவள் வதனத்தில் சந்தனைக் கோடுகள் உப்பு மறித்து விளையாடிக் கொண்டிருந்தன. கைவிளக்கைப் பொருத்தி வைத்துவிட்டு, பெரிய தீபத்தை மலையேற்றாமல் இருந்த தவறு அப்போது அவளது தவிப்பை நினைவுறுத்தியது. உறுத்திய மனத்தில், தன் தந்தையைக் குறித்து ஊர்வாய் முண முணத்த தன்மை-

க. மே. 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/104&oldid=1386224" இலிருந்து மீள்விக்கப்பட்டது