பக்கம்:களத்துமேடு.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

களத்து மேடு


அல்லாத்தையும் சொல்லோணும்? ம்....சமைஞ்ச குட்டிக்கு லாயக்கா பெத்தவ மட்டும் இருந்திருந்தாக்கா, என்னா குறைச்சல் எனக்கு?......அவுக அவுகவிதி அவுக அவுகளோட!...ஊம்!'

நினைவுகளின் சங்கமத்தில் அவளது கன்னி நெஞ்சம் உறவாடியதே தவிர, அவள் ஒட்டவில்லை.

அவள் : தைலம்மை!

அவள் நெடு மூச்செறிந்தாள். கொட்டடி ரவிக்கையின் இருதயப்பகுதியில் செம்மையின் சூடு; மதர்ப்பின் துள்ளல்?

பழம் கனிந்தால் தரையில் உதிரும்.

எண்ணங்கள் கனிந்தால் பெருமூச்சு உதிரும்.

கிடாரி ஓங்கார நாதமிட்டு ஓடி வந்தது. 'ம்...... மா!' என்ற அக் குரலிலே பிரணவப் பொருளின் பொருள் குரல் ஈந்திருக்க வேண்டும்! சந்தைப்பேட்டைப் பூரணி சீவிய கொம்புகளை காவி வர்ணம் நிறக்கும்படியாக குமரிப் பெண்ணைப் போல சிலுப்பிக்கொண்டு வந்து நின்றது. அதன் முகம் சாம்பிக்கிடந்தது. மழை தண்ணீர் இருந்திருந்தால், புல், தழை மண்டிக் கிடக்கும். இந்த வாயில்லா ஜீவன்களின் முகங்களும் செழித்து விளங்காதா? ஒரு குடங்கை வைக்கோலைத் தின்றது அது நின்றவாக்கிலே. எம்பித்தாவியபடி சேகரம் செய்து போட்டாள். இருந்திருந் தாற்போல, அவளுக்கு அடுப்படி ஞாபகம் வந்தது. ஆக்கின குழம்பு கொதித்துக் கொண்டிருந்தது. பலாச்சுளை வற்றல்கள் முழுவேக்காடு கண்டிருக்கும். சோறு நுரை கட்டிப் பொங்கத் தொடங்கிவிடலாம். வெள்ளைக் கட்டை. கொஞ்சம் தாங்கித் தான் வேகும்!

காலமும் கனவும் கேள்வியும் பதிலுமாக உருவெடுத்து. உருக்காட்ட, அந்த நினைவு நிலைத் தடுமாற்றத்துடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/11&oldid=1386079" இலிருந்து மீள்விக்கப்பட்டது