பக்கம்:களத்துமேடு.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

களத்து மேடு


முகூர்த்த நேரத்திலே எம்புட்டோ சம்பந்தம் மாறிடுறது இல்லையா? நம்ம பெரியாயி மகனுக்குப் பேசின வல்லவாரிப் பொண்ணு திருப்பூட்டுற சமயத்திலே மாறிடலையா? சிலட்டூர் மாப்புள்ளை, எதுக்கும் மசிபலையின்னாக்க, இருக்கவே இருக்கான் எங்க அக்கா மவன் சிங்காரம்! ஆத்தா காட்டேறி என்ன முடிச்சிருக்காளோ? இல்லாங்காட்டி, இப்ப நம் சிங்காரம் இங்கிட்டு இப்படி மாயமாய் வந்து குதிச்சிருப்பானா?" என்றார் அவர்.

"அப்படீங்களா சமாச்சாரம்? என்று நிறுத்தினரள் தைலம்மை, அவள் கண்கள் ஏன் அப்படித் துடித்தன?

"ஒனக்கு எம் பேச்சு சரியின்னு தானே படுது, தைலி?"

"அதைப்பத்தி இப்பைக்கு என்னாலே ஒரு முடிவும் சொல்ல ஏலாதுங்க. அதுக்கு உண்டான காலம் வந்ததும், தன்னாலே அதைப்பத்தி நீங்க தெரிஞ்சுக்கிடுவீங்க!... சரி, நீங்க போய்ப்படுத்துக்கிடுங்க!..." என்று புதிர் போட்டாள் தைலி.

"சரி ஆத்தா! உன்னைப்புரிஞ்சுக்கிடுறதுக்கு நான் குன்னக்குடிக்குக் காவடி தூக்கவேணும் போலிருக்குதே!... ம்... நான் போறேன்!"

தந்தையின் தலை மறைந்ததும். சோற்று வட்டியை அப்படியே மூடிவைத்துவிட்டு, 'கைகளைக் கழுவினாள்' அடுப்பங்கரையிலேயே தலையைச் சாய்த்தாள் தைலம்மை.

கதிர்க் கொத்து 11

அம்மான் மகள் தைலி!

புலரிப் பொழுதில் அருமையான உழவுமழை அருமையாகப் பெய்து, ஓய்ந்தது. அதன் சாயலை மண் கட்டிக் காத்துக்கொண்டிருந்தது. இம் மகிமையில் பங்கு கொண்டான் உதய சூரியன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/111&oldid=1386053" இலிருந்து மீள்விக்கப்பட்டது