பக்கம்:களத்துமேடு.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

107


தெரிந்தது. ஒரு முறை சிலட்டூர்ச் சம்பந்தத்தை முடித்து வந்த விவரம் சொன்னதும் தாமே உள்ளே கொண்டு போய் வைத்த முடிச்சு அல்லவா அது?

இவ்விஷயம். அவளுக்கு நினைவு வந்துவிட்டது. புத்தார்வம் துலங்க, அம் முடிச்சை அவள் அவசரத்தோடு அவிழ்த்தாள். நகை நட்டுக்கள் பளிச்சிட்டன. அவற்றைக் கூர்மையாகப் பார்வையிட்டாள். அம்புட்டும்' என்னைப் பெத்த புண்ணியவதியின் நகைகளாச்சே? இதுகளை எதுக்கு இப்படி, மூட்டைகட்டி வச்சிருக்காரு 'அப்பாரு'? என்ற கேள்வி அவளுள் எழும்பி, அக்கேள்வியே பெரியதொரு மர்மமாகவும் பட்டது அவளுக்கு. இத்தனை நகைகளையும் அப்பன்காரர் அவரோடு காதலிப் பெரண்னுக்குக் உடுத்துப் போட்டுக்கிடச் சொல்லியிருப்பரரோ?... ஆமா, அப்படித் தான் இருக்கவேணும்!.... செல்லாயி வூட்டிலேயிருந்துதான் இதுகளை அண்ணக்கிக் கொண்டார்ந்திருக்கவும் வேணும். அந்தப் பொம்பளை இனித் தேறமாட்டாளின்னு புரிஞ்சிக் கிட்டுத் தான் இங்கிட்டுக் கொண்டார்ந்திருப்பாரு அப்பாரு!..... என்று எண்ணம் பின்னிக்கொண்டிருக்கையில், அவளுக்கு இன்னொரு தாக்கலும் நினைவோடியது.



ருநாள்!

களத்துமேட்டில் 'போரடி அலுவல் முடிந்து, நெல் தூற்றி அளந்து மூட்டைக் கட்டி வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருந்தார் தைலியின் தந்தை. விடிந்தால் பொங்கல் திருநாள். பொங்கலுக்கு பூசி மெழுகி, மாக் கோலமிட்டு, நல்ல விளக்கு ஏற்றி, தாய் வீட்டில் வைத்துப் படைப்பதற்காக தன் ஆத்தாளின் ஆபரணங்களைப்பற்றி விசாரித்தாள் அவள். 'ஆயிங்குடியிலே நம்ம பெரியாயி வீட்டுக் கண்ணாலத்துக்காக அதுகளை கொடுத்திருக்கேன். தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/114&oldid=1386060" இலிருந்து மீள்விக்கப்பட்டது