பக்கம்:களத்துமேடு.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

களத்து மேடு

கழிஞ்சடியும் வந்துப்புடும்!’ என்றார் அவர். வழக்கமாக அந்நகைகளைப் பொங்கலுக்குப் படைக்கும் அதுவரை தடைப்பட்டதில்லை. தந்தையின் பேச்சை நம்பினாள் அவள் நம்பியதோடு, அப்புறம் அது பற்றியும் அவள் மறந்து விட்டாள். பிறகு ஒரு நாள் அவளிடம் அவளது திருமணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார் அவள் தந்தை.

“எப்பிடியும் தை மாசத்திலோ இல்லை, பங்குனியிலோ உங்கண்ணாலத்தை முடிச்சுப்பிட வேணும் ஆத்தா. உன் ஆத்தாளோட நகைங்கதான் கைக்கு மெய்யாய் பொட்டியிலே இருக்கு. அதுகளுக்குக் காலம் இன்னமும் தப்பல்லே ஒனக்கு ஆசையின்னா, அட்டியல் கல்லு வச்சுச் செஞ்சுப்பிடுறேன். பரிசம் போட்ட கையோட, ஆண்டபெருமாள் ஆசாரி கிட்டே தங்கத்தை நிறுத்துக் குடுத்துப்புட்டா, ஒரு வாரத்துக்கு மேம்படாமத் தந்திடுவார். அவரு நம்ம பத்து வரவுக்காரர். கூலிப்பணத்தை வட்டியிலே கூட அண்டல் பண்ணிக்கிடுறதுக்கும் தோதுதான்!” என்றார். அவளும் ‘ஊம்’ கொட்டினாள், தோடு, தொங்கட்டான், கொலுசு, நெளிமோதிரம், பூச்சரம் என்று ஒவ்வொன்றாக ஞாகப்படுத்திப் பார்த்தாள். ‘இரட்டைவடச் சங்கிலி!’ என்று ஒர் அரைக் கணம் யோசித்தாள். மறுகணம்: ‘அதான் எங்கழுத்திலேயே இருக்குதே??’ என்று சமாதானப்படுத்திக் கொண்டாள். இப்போது ஒரு கவலை தீர்ந்தது என்ற பாங்கிலே அவள் நகை முடிச்சை அச்சுக் குலையாமல் இறுக்கிக் கட்டினாள்; இருந்த இடத்தில் வைத்தாள். கதவை இருந்தது இருந்தவாக்கிலேயே வைத்துவிட்டுத் திரும்பினாள். பெற்றவன் சொன்ன பொய் அவளைவிட்டுப் பிரிந்துவிட ஒப்பினால் தானே? காதல் என்றாலும் சரி, கத்தரிக்காய் என்றாலும் சரி, எதிலுமே லாப நஷ்டக் கணக்கு பார்க்கும் சூரர் ஆயிற்றே அவர்?

வாசலுக்கு விரைந்ததும் முதல் கடனான நல்ல மூச்சைப் பிரித்தாள் தைலம்மை. அன்னையின் இன்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/115&oldid=1386902" இலிருந்து மீள்விக்கப்பட்டது