பக்கம்:களத்துமேடு.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

களத்து மேடு


அப்போது "அம்மான் பொண்ணே தைலி!" என்று குரல் கொடுத்தவண்ணம் சிரிப்பின் சிருங்காரத் தோடு, தனிக்காட்டு ராஜா போல அங்கு வந்து நின்றான் சிங்காரம்!

"வாங்க, வாங்க" என்றாள் தைலம்மை.

"இப்ப நான் வரப்போறதில்லே. போயிட்டுத்தான் நொடியிலே திரும்பப்போமேனாக்கும்! என்னைக் காணாமல் நீ தவிப்பியேன்னு ஒன்னைத் தொட்டுத் திரும்பி, உங்கிட்டே ஒரு வார்த்தை சொல்லிக்கிட்டுப் போவத்தான் வந்தேன்..." என்றான் இளவட்டம்.

"மெய்தானுங்க, ஒங்களைக்காணாம தவிச்சுப் போயிட்டேனுங்க!" என்றாள் இளங்கிளி.

"போடு சவாசுன்னானாம்! பலே, அம்மான்மகளே!.... இது போதும் எனக்கு! ராத்திரி முச்சூடும் நான் தூக்கம் பிடிக்காமத் தவிச்சுப்புரண்டதுக்கு இந்த ஒன்னோட ஆறுதல் பேச்சு ஒண்ணுபோதும்! இதுவே எனக்கு, ஒன்னகை தத்ரூபமாய்க் காட்டிக் குடுத்திருச்சு!... அல்லாம் ஆத்தா காட்டேறியோட தயவு தான்! சரி, நான்போயிட்டு வாரேன்! இந்த ஒரு தாக்கலை அந்தச் சிங்கத்துக்கிட்டே வீசி யெறிஞ்சுப்புட்டு ஓடியாந்திடுகிறேன் சிட்டாட்டம்! நீ தைரியமா இரு!... அம்மான்காரக வந்தாலும் சொல்லிப் போடு]... மறந்துபுட்டேன்!...... வந்தடியும் ஒன் தங்கக் கையாலேதான், கஞ்சி குடிக்கவேணும்!... வரட்டுமா?" என்று ஓங்காரக் குதுகலத்துடன் வார்த்தைகளைச் சரமாரியாகக் கொட்டித் தள்ளிவிட்டு, ஆண் சிங்கமென கம்பீரம் பாய்ச்சிப் பிரிந்தான் சிங்காரம். பட்டுச் சொக்காயின் பளபளப்பு மின்னி மறைந்தது.

தைலம்மை திக்குப் புரியாமல் மலைத்து நின்றாள்.

அவள் மனத்தில், சரவணனும் சிங்காரமும் தட்டா மாலை சுற்றிக் கொண்டேயிருந்தார்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/119&oldid=1386391" இலிருந்து மீள்விக்கப்பட்டது