பக்கம்:களத்துமேடு.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

களத்து மேடு


பயிரைப்போன்ற இளமீசை அவன் முகத்துக்கு ஒர் ஆண்மையையும் நல்கின. தன் நெஞ்சரங்கிலே-ஒயில் கூட்டி ஒய்யாரம் காட்டி நடனமாடிக் கொண்டிருந்த தன்னுடைய அம்மான் மகளின் அழகுமுகத்தைத் தனக்குத்தானே ரசித்த வனாக அவன் நாற்புறமும் பார்வையைச் சாடி விட்டான். "இங்கணவே குத்துக்கல்லுகணக்கிலே நிக்கிறேன்? அப்படி இன்னு வாக்குக் குடுத்த சேக்காளி சரவணன் எங்கிட்டு மறுகிப்போயிட்டானோ, புரியலையே?... எங்கே சுத்தினாலும் தேரு நிலைக்குவந்துதானே தீரவேணும்? வரட்டும், வரட்டும்! இண்ணக்கி ரெண்டிலே ஒண்னு புரிஞ்சுப்புடும். சேக்காளிக்கு சேக்காளி சேடையின்னு வந்தப்புறம், ரெண்டிலே ஒண்னு முடிய வேண்டியதுதானே! பணம் வெல்லுதா, இல்லே, மனம் வெல்லுதா என்கிறதைத்தான் பார்த்துக்கிடு றேனே?"... என்று சிந்தித்த அவ்ன் இராப்பொழுதில் தன் அம்மான் வீட்டினுள்ளே நடந்த பேச்சுவார்த்தைகளையும் நினைவிற் கொண்டான். அதன் விளைவாக, தான் இரவு முழுவதும் அமளிப்பட்ட மனத்துடன் கொட்டக் கொட்டவிழித்து அவதிப்பட்ட நிலையையும் அவன் ஞாபகப் படுத்திக் கொண்டான். அப்போது, “மெய்தானுங்க; உங்களைக் காணாமத் தவிச்சுப்போயிட்டேனுங்க!” என்று தைலம்மை கூறிய அந்த ஆறுதல் மொழியே அவனுக்கு வாய்த் திட்ட ஒர் உலகமாகவே தோன்றியது. அந்த அமைதியின் தேறுதலில் அவன் மேலும் கம்பீரமடைந்தான். 'நான் எம்புட்டு ஆசையோட இங்கிட்டு வந்தேன். ஆத்தாளும் அம்மானும் சத்தியம் பரிமாறிக்கிட்டதை யொட்டி எனக்கின்னு தைலி காத்துக்கிட்டு இருக்கும்னுதான் நான் ஓடோடி வந்தேன். காத்துக்கிட்டிருக்கிற இம்மாம் பெரிய சோத னையை நான் எப்படி ரோசிச்சிருக்க ஏலும்?'... மீண்டும் சிந்தனை விரிசல் கண்டது; கண்துளிகள் சிந்தின.

காலடியில் பாம்பரணை நழுவி ஓடியது.

செம்மறிக் கூட்டம் மேய்ச்சலுக்குப் புறப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/121&oldid=1386276" இலிருந்து மீள்விக்கப்பட்டது