பக்கம்:களத்துமேடு.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

117


சரவணா! நேத்தைக்கு சண்டையிலே நீ என் முன்னரிக்கே பேசின வீறாப்பும் சுரத்தும் இப்ப வடிஞ்சிருக்கிற் தாட்டம் எனக்குத்தோனுதே!" என்று கேட்டான் சிங்காரம்.

"அப்படித் தப்புப்புள்ளி போட்டுப் புடாதே சிங்காரம்! ஒரு காலத்திலே நீ என் உசிரை கட்டிக் காப்பாத்திக் குடுத்த, புண்ணியவானாச்சே என்கிற நன்றியோடே இப்ப நான் பேசுறேன். அம்புட்டுத்தான் விசயம்!"

"சபாசு!. . அந்த நாளையிலே நான் செஞ்சது என் னோட கடமை! மனுசனாய் மண்ணிலே பொறந்த யாராயிருந்தாலும் செஞ்சிருக்க கூடியதைத்தான் நான் செஞ்சேன்! இப்ப அது இங்கிட்டு நம்ம் பேச்சுக்குக் குறுக்குச் சாலோட்டத் தேவையில்லே! நீயோ செமந்த பணம் படைச்ச புள்ளை! ஆகச்சே, ஒனக்கிண்ணு ஒரு உபாயமும் முடிவும் இருக்கும். அதைச் சொல்லிப்புடு, சரவணா!" என்றான் சிங்காரம் நெங்சுக்குழி உள்ளுற பதைத்ததை அவன் மட்டுமே உணர முடியும்!

"அப்படியா? சரி, சொல்லிப்பிடுறேன். நேத்தைக்குச் சொன்னதுதான் எம்முடிவு! என்னோட உசிரு இந்த உடம் பிலே இருந்தாக்க, பங்குனி பிறந்தடியும் நானு ஒன் அம்மான் மகள் தைலம்மையைக் கண்ணாலம் கட்டியே தீருவேன்!. இதுதான் எம்மனசிலே உள்ள வைராக்கிய முடிவாக்கும்!” என்று வீராவேச உணர்ச்சி கொப்புளிக்கக் கூறினான் சிலட்டூர்க்கங்காணி வீட்டுத் தலைமகன் சரவணன்.

"பலே! இதானே ஒன்னோட சவால்?... சரி. இப்ப என் சவாலையும் நீ மறந்துபுடாதே!. இந்த ஏழைச்சிங்காரம் நீ வச்சிருக்கிற கெடுவுக்குள்ளேவே என்னோட மொறைப் பொண்ணு தைலியை நான் கண்ணாலம் கட்டிக் கிடைலைன்னா, எம்பேரு சிங்காரம் இல்லே!... ஆமா!"... என்று தெரிவித்தான் சிங்காரம், அவன் விழிகளில் ரத்தம் கட்டிவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/124&oldid=1386298" இலிருந்து மீள்விக்கப்பட்டது