பக்கம்:களத்துமேடு.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

களத்து மேடு


"நெசமாவா?"

"ஆமா! ஏழை எனக்குப் பொய்யின்னா ஏழாம்பொருத்தம்! நான் சொன்னது சொன்னதுதான்!”

"பேஷ்! அம்படின்னா, நம்ம ரெண்டு பேரோட சவாலுக்கும் கண்ணுக்குத் தெரியா கடவுளும், கண்ணுக்குத் தெரியிற இந்தக் களத்து மேடுந்தான் சாட்சி! ... என்றான் சரவணன்.

"அத்தோட, நம்ம ரெண்டு பேர் மனச்சாட்சியும் நம்ம ரெண்டு பேர் சவாலுக்கு சாட்சியாய் இருக்கட்டும்!... என்னோட சூள் பேச்சை நீ மண்னு காண்பிச்சுப்புட்டாக்க, அப்பவே நான் ஒன் காலுக்குச் செருப்பாய் ஆயிடுறேன்! நீ என்ன சொல்லுறே?" என்று வினவினான் சிங்காரம் ஓங்காரத் தொனியில்.

"எஞ்சவாலை நீ தோற்கடிச்சுப்பிட்டாக்க, அப்பவே நான் ஒனக்குக் கொத்தடிமையாய் ஆகிப்புடுறேன், சிங்காரம்!" என்று முழக்கமிட்டான் சரவணன்.

"சரி;... நம்ம பேச்சு இனிமே இத்தோட நின்னுக்கிடட்டும்!.., சரி, வா... சாயாக்குடிக்கப் போவோம். வண்டியைப் பூட்டு, சேக்காளி!" என்றான் சிங்காரம்.

"நான்தான் காசு குடுப்பேன்!" என்று அடித்துச் சொன்னான் சரவணன்.

"அதான் நடக்காது. நீ தான் அண்ணைக்கு வாங்கிக் குடுத்திட்டியே? இப்பைக்கு ஒனக்குக் கடன்பட்டிருக்கிற ஆளு நான்தானே? மறுதளிக்காமல் கிளம்பு, சரவணா!"

"ஊம், உன் ஆசையை ஏன் மாற வைக்கோணும்? இரு, வண்டியைப்பூட்டுறேன்", என்றான் சரவணன், சிரிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/125&oldid=1386307" இலிருந்து மீள்விக்கப்பட்டது