பக்கம்:களத்துமேடு.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

119


புடன். துரிதமுடன் காளையைப் பூட்டினான். "ஊம், ஏறிக்க’’ என்று சொல்லித் தார்க்குச்சியைப் பாய்ச்சினான் சரவணன்.

ரேக்ளா தென்திசை நோக்கிப் பறந்தது.

தோழனுக்குத் தேநீர் வாங்கிக் கொடுத்தான் சிங்காரம். அவனும் பருகினான்.

"சரி, நான் எங்க வூட்டுக்குப் போறேன். நீ எப்ப எங்க ஊருக்கு வரப் போறே கோழி விருந்து சாப்பிட?..." என்று கேட்டான் சரவணன்.

"நம்ம சவாலோட முடிவு தெளியட்டும். அப்பாலே, அதைப்பத்திப் பேசிக்குவோம்! உன் வூட்டுச் சோத்தை இனிமேல்தானா நான் புதுசாச்சாப்பிடப் போறேன்?...” என்றான் சிங்காரம்.

"பழசுபட்டது சகலத்தையும் மறந்துப்புடாம இருக்கீயே சிங்காரம்?... உன் போக்கு ரொம்பவும் சிலாகிக்கக் கூடிய தாக்கும்!" சரவணன் பேசினான்.

"காலம் நம்ம கைக்குள்ளவா இருக்குது? ஊஹூம். ஒருக்காலும் இல்லே! ஆனா, நம்ம மனசு மட்டும் நம்ம கைக்குள்ளேதான் இருக்குது! அதை மறந்துப்புடலாமா? சரவணா?" சிங்காரம் பேசினான்.

"நூத்திலே ஒரு சேதிதான், சிங்காரம்!"

"நல்லது. புறப்படு. வெய்யில் உச்சிக்குத் தாவுறதுக் குள்ளாற நீ ஆட்டுக்குப் போய்ச் சேர்ந்திடலாம்!"

"ஆமா, நான் போயிட்டு வாரேன் சிங்காரம்!"

"போயிட்டு வா, சரவணா! நாம் ரெண்டு பேரும் அடி நாள் தொட்டு உசிருக்கு உசிரான சேக்காளிங்க என்கிறதை மட்டும் எப்பவும் யாபகத்திலே இறுக்கி வச்சுக்கிடு, சரவணா!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/126&oldid=1386316" இலிருந்து மீள்விக்கப்பட்டது