பக்கம்:களத்துமேடு.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

களத்து மேடு

"ஊம்"

"முழுகாம இருக்கிறதாய் ஒங்க செட்டிய வூட்டிலேயிருந்து ஒரு பேச்சு வந்திச்சே?"

"இந்தாலே முழுகப் போறேனே, தைலி?" என்று சிரித்தாள் காத்தாயி.

"குறும்புத்தனம் எப்பவும் உன்னை விட்டுப் போகாதே?" என்று தைலியும் சிரித்தாள்.

"அடி ஆத்தே! கோவுச்சுக்கிடாதே. சும்மா கேலிக்குச் சொன்னேன் என்னமோ, சாமி தயவிலே அந்தப் பேச்சு சுத்தம்தான்!"

"நல்லா இரு!"

தைலி சேலைக்குச் சவுக்காரம் போட்டுக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது இன்னொருத்தி தைலியை அண்டினாள். அவளுக்கும் பெயர் உண்டு. சொக்கி என்று பெயர். வெண்டிக்காய்ப் பேச்சுக்காரி அவள்.

அவளைக் கண்டும் காணாததுபோல தைலி தலையைக் குனிந்து கொண்டாள். அவள் மனத்தில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த அந்தக் களத்துமேட்டுச் சங்கதி அவளுக்கல்லவா தெரியும்!


"தைலி!” ...

"என்னா சேதி, சொக்கி?’’

"நம்ம குடியிருப்புக்குள்ளாற ஒரே, சத்தமா இருக்குதே?"

"என்னா சங்கதி?... வேட்டுகீட்டு வெடிக்கிறாங்களாங்காட்டி?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/129&oldid=1386337" இலிருந்து மீள்விக்கப்பட்டது