பக்கம்:களத்துமேடு.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

123


"அதெல்லாம் இல்லேடி, அல்லாம் உன்னைப்பத்தித் தான் பேச்சாயிருக்குது!’’

"தட்டுக்கெட்டவுங்களைப்பத்தியும் தில்லு மல்லுக் காரங்களைப்பத்தியும்தான் பேசுவாங்க நான் ஒன்னைமாதிரிப் பட்டவள் இல்லையே?... என்னைப்பத்தி எவடி பல்லுமேலே பல்லுப்போட்டுப்பேசுவா? என்னைப்பத்தி பேசுறத்துக்கு அவுளுகளுக்கு ஈரலிலே பித்தா, இல்லே, எலும்பிலே பித்தாடி?..." என்று கல்லடியிலிருந்து எழும்பினாள் தைலம்மை. அவளது மாநிற முகத்தில் ரத்தம் இழைகட்டியிருந்தது.

"என்னடி தைலி! நானு சாதாரணமாப் பேசினா, அதுக் காக துரும்பைத்துரணா வளர்க்கிறீயே? என்னமோ ஒரு சமயத்திலே எக்குத் தப்பா தடம்மாறி நடந்ததுக்கு என்னைக் குத்திக்காட்டி ஏசுறீயே?" என்று அச்சத்துடன் பயமாகக் கேட்டாள் சொக்கி.

"பின்னே என்னவாம்? வாயைக்கொடுக்கிறதிலே வகை இருக்கோனும்டி, சொக்கி! இன்னமும் அவள் கோபம் ஆறவில்லை. கோபம் உள்ள இடம்தான் குணத்துக்கும் இடம்!

"நானு சொன்னதானது ஒன்னோட கண்ணாலத்தைப் பத்தி கொஞ்சம் முந்தி களத்துமேட்டிலே உங்க அயித்தை மவனும் சிலட்டுர்க்காரரும் தடிப்பாப் பேசிக்கிட்டதாய் எங்க அத்தாச்சி சீரங்கத்தம்மா சொன்னாங்களாம்."

மறுபடி குந்தினாள் தைலம்மை. அழகுபரக்கச்சிரித்தாள். "ஊருக்கு என்னடி சொக்கி வேலை? ஒண்ணை ஒன்பதாத் திரிக்கும்! அந்த ரெண்டு பேர் பேச்சும் ரொம்ப நாயமாய் இருந்திச்சு!.. நானே சீரங்கத்தம்மா வூட்டிலே இருந்து கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேனாக்கும்! என்னைக் கொண்டுக்கிடுறத்துக்கு ரெண்டு பேரும் சவால் போட்டுக் கிட்டாங்க! அம்புட்டுத்தான் நடப்பு’’ என்று அமைதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/130&oldid=1386344" இலிருந்து மீள்விக்கப்பட்டது