பக்கம்:களத்துமேடு.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

களத்து மேடு


“அக்கா, கோவிச்சுக்காதே! ..

ஒரு புதுச்சங்கதி தெரியுமா ஒனக்கு?”... என்று வினா விடுத்தாள் பூங்காவனம்.


‘என்ன?’ என்ற பாவனையில் சமிக்ஞை பதித்தாள் தைலம்மை.

“நானு சிலட்டுர் மருமகப் பொண்ணாய் ஆகப் போறேன்னு பொத்தாம் பொதுவாகச் சொன்னாக எங்க அப்பாரு! இப்ப, சிலட்டுரிலே பொறந்த அந்த ஆம்பளையும் சிலட்டுரிலே வளர்ந்த நம்ம அயித்தை மவனும் பொதுப் படையாய் நிற்கிறாங்களாம்! இதையும் அப்பாரு சத்த முந்தி புட்டுச் சொன்னாரு!.. இவுக ரெண்டு பேரிலே நீ விரும்பாத மாப்புள்ளை-அதாகப்பட்டது, ஒன்னை அடைய முடியாத மாப்புள்ளை எனக்கு மாப்பிள்ளையாம்! இதையும் எங்க அப்பாரே புட்டுவச்சாரு, அக்கா ஆமா, நீ அவுக ரெண்டு பேரிலே யாரைக் கண்ணாலம் கட்டிக்கிடப்போறே?... அது தெரிஞ்சா, நானு இப்பவே யாரானும் ஒருத்தரையே சதமின்னு நெனைக்கிறத்துக்கு லாயக்குப்படுமில்லே?...” என்று வெகுளித் தனமாகக் கேட்டாள் பூங்காவனம். காற்று விலக்கிய மேலாக்கைப்பற்றிக் கூட அவள் கருத்துக் கொள்ளவில்லை!

‘அடி தங்கச்சி!.குளிச்சிட்டுவா, மலையாளத்து ஐயரு கிட்டே ஜோசியம் கேட்டுச் சொல்லுறேன்! ... நீ குளி!... உனக்கிண்னு ஒரு ஆ. பளையைச் சாமி புடிச்சுப் போடாம இருந்திருக்க மாட்டாருடி, பூங்காவனம்’

என்று நிதானமாக, சிரிக்காமல் செப்பினால் தைலி.

ஏனோ, ஏனைய பெண்கள் ‘கொல்’லென்று நகைத்தனர்.

பசுக்கூட்டம் தண்ணிர் குடித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/133&oldid=1386081" இலிருந்து மீள்விக்கப்பட்டது