பக்கம்:களத்துமேடு.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

127


காக்கை குளியல் குளித்துவிட்டுக் கரையேறினாள் தைலம்மை. “அல்லாரும் இருங்க. நான் போயிட்டு வாரேன்! நான் சொன்னேனின்னு இங்கணேய இருந்திடாதீங்க!...” என்று எந்தக் கவலையும் அற்றவள் போன்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினாள் தைலம்மை. உடன் தொடர்ந்தாள் பொன்னாயி.

“மெய்யாலுமே நம்ம தைலி ஒரு தனிப் பொறப்புத் தாண்டி! பாவம்,இந்தச் சொக்கிதான் வசமாத்திட்டு வாங்கிக் கட்டிக்கிட்டா!...தைலி நெருப்பு என்கிறது இவளுக்கு இன்னம் விளங்கலையே!” என்ற பூவாயியின் பேச்சைத் தைலி காதுகளில் வாங்கிக் கொண்டே மடங்கினாள். வலதுகால்பாதத்தில் குத்திவிட்ட நெருஞ்சி முள்ளை லாகவமாக எடுத்து வீசி விட்டுத் தன்பாட்டில் நடந்தாள் தைலம்மை! ‘ஆத்தா மூத்தவளே! என்னை ஏதுக்கு இப்படிச் சோதிக்கிறே?... எனக்கு ஒரு விடிவைக்காட்டப்புடாதா தாயே?’ என்று அவள் உள் மனம் ஏங்கித் தவித்துக் கொண்டிருந்ததை அவள்தான் அறிவாள்!

வெய்யில் சுட்டுப் பொசுக்கியது.

கதிர்க் கொத்து 14

ரங்கூன் பட்டு வந்தது

யித்தைமவன் வந்து அனைய நேரமாச்சுப்போலே!” என்று நிதானமான குரலில் விசாரித்தவண்ணம், மலர்ச் சிரிப்பை இதழ்களில் ஏந்தி நயமான நாணத்தைக் கண்களில் தாங்கி வாசலில் நடந்துவந்த தைலம்மை, ஈரப்புடவையின் முகதலைவை நன்றாக இழுத்துவிட்டுக் கொண்டு குனிந்த தலை நிமிராமல் முகப்புத் திண்ணையில் சற்றே ஒதுங்கினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/134&oldid=1386084" இலிருந்து மீள்விக்கப்பட்டது