பக்கம்:களத்துமேடு.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

129


பையும் கையுமாக அவளைத் தொடர்ந்து உள்ளே சென்றான் சிங்காரம். “அம்மான் வரலையே இன்னம்?” என்று கேட்டான்.

“அவுக வாரதுக்கு நேரமாகும் போலத் தோணுது வயலிலே நடவு நடக்குதாம். தண்ணிப்பாட்டுக்குக் கவலை இல்லை. ஆனதாலே, இந்தக் கருத்தம் வெள்ளாமையை இரண்டாம் போகமாய் நடத்துருங்க. இந்தக் கங்காணமும் மகசூலும் முடிஞ்சா அறுபதாம் பட்டம் விளைச்சல் தீர்ந்த கதைதான். அப்பாலே, கொஞ்சம் இடைவெளி விட்டுப் புட்டு, ஆடிப்பட்டத்தைக் கவனிப்பாங்க. அக்கரைச்சீமை லாவாரம் கை இறங்கிப் போனதிலேருந்து அப்பன்காரவுகளுக்கு வெள்ளாமையிலே தான் கண்ணு பாஞ்சிருக்குது!.... கடலைக்காய், எள்ளு இதுகளிலேயும் உபரியாய்க் கிடைக்குது. அப்பன்காரக எனக்கு வேண்டியதைச் சேர்த்துத்தான் வச்சுக்கிட்டு இருக்காரு. பணங்காசிலே கறாராயிருப்பாங்க, வம்பு சண்டையிலவும் கடுமை காட்டு வாங்க. இடைநட்டிலே பொம்பளை ஒருத்தி சவகாசத்திலே ஒரு மாதிரி நடந்துகிட்டு இருந்தாங்க. அந்தச் சனியனும் விலகிடுச்சு. அந்தப் பொம்பளையும் காலாவதி ஆயிடுச்சு. மத்தப்படி, அப்பன் காரகளுக்கு நாணின்னா ஒரு கவலை தான்; அக்கறை தான்; பாசம்தான்!...” என்று சொல்லி நிறுத்தினாள் தைலம்மை.

“வீட்டு விவகாரம், வயல் நிலவரம் அல்லாத்தையுமே கரைதலைப் பாடமாய் வச்சிருக்கியே நீ?” என்று அதிசயப் படலானான் சிங்காரம்.

“தானாப்பளியா இருந்தாக்க, இந்தக் காலத்திலே காலந்தள்ள முடியுங்களா? மானமா வாழவேணுமின்னா, அல்லாத் தாக்கல் தகவலிலேயுந்தானுங்களே பொறுப்போட இருக்க வேணும் சரி, குந்துங்க. அப்பன் வாரதுக்குத் தாமசம் ஆகிம்னுதான் பண்ணைக்கார காத்தான் மகன் நான் குளிச்சுத் திரும்பையிலே சொல்லிட்டுப் போனான்!”

க. மே 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/136&oldid=1386099" இலிருந்து மீள்விக்கப்பட்டது