பக்கம்:களத்துமேடு.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

களத்து மேடு


சிங்காரம் சாப்பிட அமர்ந்தான். “விருந்துச் சாப்பாட்டுக்கு ஒப்ப இருக்குதே வெஞ்சனங்க?” என்றான்.

“விருந்தாடிக்குக் கொஞ்சம் கூடுதலாத்தானே செய்ய வேணுமுங்க?”

“நான் விருந்தாடியாவா ஒனக்குத் தோனுறேன்? ”

“நீங்க எப்பவும் எனக்கு அயித்தை மவனாத்தான் தோனுவீங்க!”

“பின்னே ஏதுக்கு இம்புட்டு சாகமெல்லாம்?...”

“ஒண்னும் பிரமாதமா வைக்கல்லை. இன்னம் எம்புட்டோ சீராச் செய்ய வேணும்னுதான் நெனைச்சேன், அப்பாலே மதியத்துக்கு ஆக்கிப்புடுறேன்.”

“ஆத்தாடியோ விருந்தும் மருந்தும் மூணு வேளையின்னு ஒரு பேச்சு உண்டே?”

“அதெல்லாம் ஒங்கமட்டுக்கு விலக்கு. நீங்க எப்பவும் இங்கிட்டே சாப்பிடவேணும்.”

“நெசமாவா?”


“பொய் பேச மாட்டேன் நான்!”

“எப்படி இருந்தாலும், ஒங்கண்ணாலம் மட்டுக்கும் தானே இந்த உபசாரம் அல்லாம்!”

அவள் ஏனோ சிறுபொழுது தயங்கினாள். பிறகு சித்தம் தெளிந்தவளாகச் சுதாரித்துக் கொண்டாள். “அதுக்குள்ளாற நீங்களும்தான் கண்ணாலம் காட்சி கொண்டாடிப்பிடுவீங்களே?” என்றாள் அவள்.

இப்போது சிறுபொழுதுக்கு சிங்காரம் தயங்கினான் “ஆமா, ஆமா!” என்றான்.


“சரி, சாப்பிடுங்க!”

“ஊம்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/137&oldid=1386106" இலிருந்து மீள்விக்கப்பட்டது