பக்கம்:களத்துமேடு.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

களத்து மேடு


“எம்பேச்சு இப்ப சோறு போடாது, தைலி! ஒம் பேச்சுத் தான் இப்ப ஊருக்கு விருந்து வைக்கப் போவுது!”

“அப்பிடிங்களா?”

“பின்னே?”

பார்க்கலாமுங்க!...எனக்கும் கொஞ்சம் தவணை வேணும். ரோசனை பண்ணிச் சொல்லிப்பிடுறேனுங்க!”

“தாராளமாய்ச் செய், தைலி! என்று சொல்லிக் கொண்டே பையைப் பிரித்தான் இளவட்டம். தைலி, நாளான்னிக்கு பெருங்காறை முண்டர் கோயில் திருநாளுக்காக ஒனக்கு இந்த ஏழைக்குக் தக்கனை ஒரு எள்ளுருண்டை கொண்டாந்திருக்கேன். அதை ஏத்துக்கிடு. ஒன் முடிவுக்கும் நான் இப்ப தார பரிசுக்கும் ஒக்குமத்து இல்லே. ஆனபடியினாலே, நீ இதை வாங்கிக்க!” என்று சொல்லி, அவளிடம் பரிசை நீட்டினான் அவன்.

பரிசளித்தது எள் உருண்டையல்ல.

அழகு கொழித்த ரங்கூன் பட்டுச் சேலையும் ரவிக்கையும் இருந்தன!

"நீங்க என் அயித்தைமவன். நீங்க தாரதை மறுதளிக்கிறதுக்கு எனக்குச் சட்டமே கிடையாதுங்க!... அடி நாள் தொட்டு எம்மனசைத் தொட்ட சீலர் நீங்க இடையிலே ஓங்க கதை எதுவும் எங்களுக்கு மட்டுப்படாமப் போனதாலேதான், நம்ம ரெண்டுவீட்டுப் பெரியவுங்களும் கையடிச்சுச் சத்தியம் பரிமாறிக்கிட்டதையும் செயல்படுத்த ஏலாமப் பூடுச்சு!... ஆனதாலேதான், எனக்கு அசலிலே மாப்புள்ளை தேட வேண்டிய கட்டாயம் வாய்ச்சுது! இப்ப எம்பாடு சோதனையாய்ப் போச்சு சிலட்டுர்க்காரரு என் நெஞ்சிலே விளையாடிக்கினு இருக்கிற காலத்திலே ஆத்தா ஒங்களைக் கொண்டாந்து காட்டி வேடிக்கை காட்டுற நேரம் இது!..

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/141&oldid=1386161" இலிருந்து மீள்விக்கப்பட்டது