பக்கம்:களத்துமேடு.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

135


இதைப்பத்தி இனியும் வளர்த்தி நான் பேசுறது உசிதமாப் படாது! .. கொடுங்க, ஒங்க மனசுக் கோசரம் மனம் ஒப்பி இதுகளை வாங்கிக்கிடுறேனுங்க; வாங்கிக்கக் கடமைப்பட்டவள் நான்!... முறைமைக்காரங்க ஒங்க மனசுக்கு இதாலே அமைதி கிடைக்குமின்னாக்க, நான் தட்டி நடக்க ஏலுமா??. மத்தப்படி, எம் முடிவுக்கும் இப்ப ஒங்க பரிசை வாங்கிக் கிட்ட நடப்புக்கும் ஒக்குமத்து இல்லேன்னுதான் ஒங்களுக்கே புரிஞ்சிருக்குமே!"

“அதைத் தான் நானே செப்பிட்டேனே! தைலி? ”

அவள் பரிசுப் பொருள்களை ஏற்றுக் கொண்டாள்.

அப்போது, பொன்னாபி வந்து ஒரமாக நின்றாள்.


“என்னாடி பொன்னாயி?” என்றாள் தைலி.


“நம்ம குடியிருப்பு குணவதியை அதோட முறை அயித்தை மவன் வந்து சிறை யெடுத்துக்கினு பறிஞ்சிட்டாராம்! ஊரே திமிலோகப்படுது!” என்றாள் பொன்னாயி.

“ஆத்தாடி! அப்படின்னா, அந்தப் பனங்குளம் பணிக்காரப்புள்ளை ஏமாந்திட்டானாக்கும்!...”

“ஆமா!”

“ஊம், இது குணவதியோட இஷ்டத்தைப் பொறுத்த விசயம்!” என்றாள் தைலம்மை.

“முறைக்கார்னின்னா, அதுக்கு ஒரு தனி மவுஸ் தானே?” என்றாள் பொன்னாயி.

“நேசம் விளையாடுற விளையாட்டு ரொம்ப ரொம்ப அதிசயமாத்தான் இருக்குது!.. இல்லையாடி,பொன்னாயி?”


“மறுகா?” என்று சொல்லிவிட்டு வந்து வழியே தடையைக் கட்டலானாள் பொன்னாயி. அவள் அவசரக் காரியல்லவா? தங்குவாளா, தரிப்பாளா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/142&oldid=1386179" இலிருந்து மீள்விக்கப்பட்டது