பக்கம்:களத்துமேடு.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

139


"ஆனா, இப்ப அது வந்திருச்சுங்களே? காலம்பற களத்துமேட்டுப் பொட்டலிலே இந்த ரெண்டு பேரும் கூடி ஆளுக்கு ஆளு சவால் விட்டுச் சபதம் வச்சிருக்கிறாங்களே?... நானே ஒளிஞ்சிருந்து இதையெல்லாம் ஒட்டுக் கேட்டேனுங் களே? சிலட்டுர்க்காரரு என்னைக் கண்ணாலம் பண்ணிக் காட்டுறதாய்ச் சம்பிராயம் வச்சாரு; நம்ம அயித்தை மவன் அவருக்கு என்னையே வாழ்க்கைப்பட வைக்கிறதாய்ச் சபதம் வச்சிருக்கிறாருங்களே?...”

பொறி தட்டினாற் போலத் தடுமாறினார் சேர்வை. பாக்கை வெட்டமுனைந்தவர், பற்களைக் கடித்துக் கொண்டார். “செல்லாயி விசயம் குறிக்கிடாட்டி, அப்பவே பரிசம் போட்டிருந்தா, இந்தத் தர்ம சங்கடமெல்லாம் விளைஞ்சிருக்குமா?” என்று வருந்தினார்.

“அப்பாரு பேச்சைப் பார்த்தாக்க, அயித்தை மவனைப் பிடிக்கலையின்னு தோணுதே?” என்று மென்று விழுங்கினாள், தைலி. “சிலட்டூர்ச் சம்பந்தப் பேச்சு அடிபடுறத்துக்கு முந்தியே சிங்காரம் வந்திருந்தா, நானும் என் அக்காளும் கையடிச்சுக்கினமாதிரி, அவன்தான் எனக்கு ஆசைமச்சானா ஆகியிருப்பான்! இப்ப காரியம் மிஞ்சியிருச்சே? பெரிய இடத்துக்கு வாக்குக் கொடுத்துப்புட்டேனே, பெண்ணே ?”

“நிசந்தான், அவுக வந்து எங்கிட்டே என்னென்னமோ சொல்லிட்டுப் போனாங்க. இருக்கிற நேசரைப் பார்த்தா, நான் இல்லாட்டி, நம்ம அயித்தை மவன் உசிர் தரிச்சிருக்கக் கூட மாட்டாங்க போலத் தோணுது!”

“என்ன ஆத்தா, உம் பேச்சு புதுத் தடத்திலே இப்ப போகுது ?”

"தடம் ஒன்னும் புதிசு இல்லிங்க. நடந்த நடப்பை செப்புறேன் ; நடக்க வேண்டியதுக்குக் கேட்கிறேன் அவ்வளவுதான்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/146&oldid=1386221" இலிருந்து மீள்விக்கப்பட்டது