பக்கம்:களத்துமேடு.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

களத்து மேடு

 “ஆனா, சிலட்டூர்ப் புள்ளி விவகாரம் என்ன ஆகிறதாம்?”

“அவுகளும் வந்துதான் எங்கிட்டேகிளிக்குப் படிக்கனை படிச்சிப்பிட்டுப் போனாங்க!”

“அப்புறம் என்ன தைவி, ரோசனை?”

“அந்த ரோசனையைத் தானுங்களே அப்பாரே, ஒங்க கிட்டே கேட்கிறாள் ஒங்க பொண்ணு.”

சிறிது நாழிகை மெளனத்தையும் எச்சிலையும் விழுங்கினார் சேர்வை.

“நான் பெரிய இடத்துப் பொல்லாப்புக்கு ஆளாக ஒப்ப மாட்டேன், தைலி!” “பொல்லாப்பு கெடக்கட்டும். சிலட்டூர்ச் சம்பந்தம் நடந்து முடிஞ்ச கதையையும் அயித்தை மகன்கிட்டே புட்டு வச்சுச் சொல்லிப்புட்டேனுங்க கச்சிதமாய்!”

“ஒனக்கு யாரை ஆத்தா புடிக்குது?”

"என்னோட நெஞ்சிலே விளையாடுறவுங்க சிலட்டூரு மச்சான். ஆமாங்க, சிலட்டூர் மாப்பிள்ளை! இப்படித்தான் இனிமே சொல்லியாக வேணும்! ஆனா, என் நினைவிலே விளையாடுறவுங்க என் அயித்தை மவனுங்க!’’ என்று நிதானம் பிறழாமல் குறிப்பிட்டாள் தைலம்மை. அவள் குரல் தாழ்ந்திருந்தது. "நிலைமையை வஞ்சனை இல்லாமப் புட்டுக்காட்டிச் சொல்லிப்புட்டேன்... எனக்கு சிலட்டூர்ச் சம்பந்தம் தான் புடிக்குது, அது ஒசந்த இடம். இந்திக் கண்ணாலம் காட்சி நல்லபடியா நடந்திட்டா, நம்ம குடும்பத் துக்கும் ஏராளம் நல்லது கெடைக்கும்! ...ஆனா, சிங்காரம் நம்ம ஆட்டுக்கு வந்தா, நம்மளுக்குக் கயிஷ்டம்தான் ஒட்டிக்கு ரெட்டி ஆகும்!... சரி, ஒம் முடிவு என்னான்னு தராசு முள் கணக்கிலே சொல்லிப்புடு!" என்றார் அவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/147&oldid=1386229" இலிருந்து மீள்விக்கப்பட்டது