பக்கம்:களத்துமேடு.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

143


"வந்துங்க...இப்ப எங்கையிலே எழுபத்தஞ்சுதான் இருக்குது. நான் நடப்பு வட்டிப்படி போட்டுக் கொண்டாந் தேன். நீங்க எதிர்பார்க்கிற சொச்சம் எட்டுமாசத்துக்கும் வட்டி கொண்டாரலை. அதனாலென்ன? சொன்ன சொல்லுக்கு மாத்துப் பேச மாட்டேனுங்க இந்த ஏழை. உள்ளதை வாங்கிட்டு தாலியைச் சுருக்கண நீட்டுங்க. மிச்சத்தை வார விசாழச் சந்தைக் கெடுவுக்குக் கொண்டாந்துப்புடுறேன்!’ என்று தலையைச் சொரியலானான் உடையப்பன்.

சேர்வை சிரித்தார். "தாலிக்கு ஒண்ணும் குந்தகம் வந்திடாதுடா. போயி சாடா பணத்தையும் பைசாப்படி எண்ணி வச்சுப்புட்டு ஒன் தாலியை மகாராசனா திருப்பி மீட்டுக் கிட்டுப் போ! இதிலே வேறே ஒண்னும் கசகல் தேவையில்லை!"

"இதையே உங்க தம்பிகாரர் கையிலே தானுங்க மால் பண்ணிக் கொண்டாந்திருக்கேன்! "

"இப்ப அவன்கிட்டவே சொச்சத்தையும் தண்டு பண்ணிக்கிட்டுவா. ஒடு!...சேரிச் சாம்பான் குத்தகை நெல் தாரதுக்கு மேலேயும் கீழேயும் பார்த்தான். கூழைக் கும்பிடு போட்டான். இன்னிக்கு வயல் பக்கத்திலேயிருந்து திரும் புறப்ப அவன் குடிசைகிட்டே எட்டி நின்னு கோபிச்சுக் கிட்டேன். அந்திக்கு நெல்லைக் கொண்டாந்து போட்டுப் புடுறதாய்ச் சொன்னான். காசு சும்மாவா கிடைக்குது?... பைசா, பைசாவாச் சேர்த்த பணம் இது! நீ ஒடு. உனக்குக் கடன் தர காத்துக்கிட்டு இருக்கிற அந்தக் கர்ண மகாராசன் கிட்டவே போயி வாங்கிட்டு வா!" என்று மூர்த்தன்யமாகச் செல்லிவிட்டார் செங்காளியப்பன்.

"கொஞ்சம் தயவு பண்ணுங்க!... உங்க குடி விளங்குமுங்க!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/150&oldid=1386250" இலிருந்து மீள்விக்கப்பட்டது