பக்கம்:களத்துமேடு.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

147

“ஊஹூம், அப்பிடி யொண்ணும் நடக்கமாட்டாதாக்கும்.”

“வார மாப்புள் ளைக்கு நான் ஒரு சுமையா இருந்தேன்னா ?...”

“அப்பிடிச் சுமையின்னு ஒங்களை நெனைக்கிற ஆம்பளை எனக்குத் தேவையில்லேங்க!...”

தங்கமே! உம் மனீசு இந்த விசயத்திலே புரியாதா எனக்கு?”

“எந்த விசயத்திலவும் எம்மனசு ஒங்களுக்குப் புரிஞ்சதுதானுங்களே, அப்பாரே?”

“ஒங்கண்ணால விசயத்திலே மட்டுக்கும் என்னாலே ஒன்மனசைத் தடம் கண்டுக்கிட ஏலலையே, தைலி?”

“அல்லாம் தன்னாலே புரிஞ்சுடுமுங்க. அததுக்கு வேளை வரவேணுமே?”

“ஆனா, கோயிலிலே நடந்துக்கிட்ட ஒம் போக்கு எனக்கு அச்சத்தை ஊட்டுது தைலி!”

“இதிலே அச்சத்துக்கு மார்க்கமில்லீங்களே!... சிலட்டூர்கார்களும் நம்ம அயித்தை மவன்காரகளும் போட்டி, போட்டுக்கிட்டு ஒட்டுப்பழமும் பலாச்சுளையும் வாங்கித் தந்ததை நானு வாங்கிக்கமாட்டேன்னு சட்டம் படிச்சதுதானுங்கவே தர்மநாயம்?” ஒருத்தர் தந்ததை வாங்கிக் கிட்டா, இன்னொருத்தருக்குச் சள்ளை. ரெண்டுபேர் வீட்டுதையும் வாங்கிக்கிட்டா, அது வெக்கம் கெட்ட பொழைப்பு, ஆனதாலேதான், அவுக ரெண்டுபேர் தந்ததையுமே ஏத்துக்கிடலை!... அவுக ரெண்டு ஆளுங்களுக்குமே எம்மேலே ஊர்ப்பட்ட சடனை இருக்கும். அதுக்கு நான் என்ன செய்யறதாம்?.... விதி ஆட்டம் போடுது. அது போடுற ஆட்டத்துக்கு சாமிதான் முடிவு. கரட்டவேணும்!...” என்று நிறுத்தினாள் தைலி; நெடுமூச்செறிந்தாள். மார்பகம் எம்பித் தணிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/154&oldid=1386254" இலிருந்து மீள்விக்கப்பட்டது