பக்கம்:களத்துமேடு.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

களத்து மேடு

பணம் வருதின்னா, என்னென்னவோ வேசம் போடுறானே?... ஆளுக்குத் தகுந்தாப்பிலே நடிச்சாத்தான் கையிலே காசு புரளும்...நீ போ. எல்லாம் எனக்குத் தெரியும்!... இனிமே, யாரும் இங்கிட்டு நெல்லைத் தேடி வர மாட்டாங்க என்று ஒரு போடு போட்டார் சேர்வை.

“அவங்க அவங்க கொள்கையும் குறிப்பும் எப்பிடி இருந்தாலும், நம்ம நாட்டோட நல்லது கெட்டதிலே நம்ம ஒவ்வொருத்தருக்கும் பங்கு இருக்குது என்கிற பொதுத் தேச உணர்ச்சியை நாட்டுச் சனங்க ஒவ்வொருத்தரும் சகட்டு மேனிக்கு உணர்ந்துக் கிடக்கூடிய நாள் வந்தாத் தான் நாடு முன்னேற முடியும்னு சீனாக்காரனை எதிர்த்துப் பேசையிலே நம்ம நாட்டுத் தலை மந்திரி, ஐயா சொல்லியிருக்கிறதை அப்பத்தா வூட்டுப் பத்திரிகையிலே படிச்சேனுங்க, அந்தச் சங்கதி ஒட்டுக்கு வாஸ்தவமின்னுதான் தோணுதுங்க!...” என்றாள் தைலம்மை

மகளை வியப்புடன் பார்த்தார் தந்தை “அரசியல் விவகாரங்கூட எம் பொண்ணுக்குத் திரமாய் திரவுசாய்த் தெரிஞ்சிருக்குது போல! பலே!...எனக்கு இதெல்லாம் புரியாது. பணம் காசுதான் புரியும்! நீ அப்பனை குத்திக் காட்டுறத்துக்கு முந்தியே நானே சொல்லிப் போட்டேன்!” ... என்று கடகடவெனச் சிரிப்பைக் கக்கினார் செங்காளியப்பன். சுருட்டு எரிந்தது; நாற்றம் மட்டும் எரியவில்லை ; “ஒஞ் சித்தப்பனுக்கு இப்ப உண்டான திமிரு வந்திருச்சு. புதையல் வேறே கிடைச்சிருக்கில்ல.... அவன் இப்ப தன் மக கண்ணாலத்தை நல்ல இடத்திலே முடிச்சுப்பிட பாடுபடுறானாம்!...எப்படியும் சிலட்டூர்க் கங்காணி மகன் சரவணனையே மாப்புள்ளையாக்கிப் போட் வலை விரிச்சிருக்கானாம்!...நம்பகிட்டே மோதுற ரெண்டு மாப்புள்ளைகளிலே நீ கழிக்கிற மாப்புள்ளையை தன் அப்பன் தனக்குக் கட்டி வைக்கிறதாய் பூங்காவனம் உங்காதிலே விட்ட சமாச்சாரம் சுத்தப்புரட்டு.... ரோசிச்சுக்க, தைலி!.... என்றார் சேர்வை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/157&oldid=1386270" இலிருந்து மீள்விக்கப்பட்டது