பக்கம்:களத்துமேடு.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

9


மாட்டேனாக்கும்!..." புறப்பட்டாள். அவளுடன் பொன்னாயிக்கும் விடுதலை!


ணங்கள் சில ஓடியிருக்கும்.

"ஆத்தா!” என்ற பாசக் குரல் ஓடிவந்து விழுந்தது.

கைவிளக்கின் சிமிட்டலில், சுவர்க் கண்ணாடியில் முகம் பார்த்து லயித்திருந்த தைலம்மை, கன்னங்களின் செம்மையில் கலந்திருந்த முகப்பருக்களை நோக்கியபடி இருந்தாள். அழைப்பின் ஒலிகேட்டதுதான் தாமதம், "அப்பா!..." என்று பதில் குரல் ஈந்தவாறு, வெளிப்பக்கம் ஓடி வந்தாள்.

வாசலில் நின்னார், செங்காளியப்பன் சேர்வை. கையிலே ஒரு முடிச்சு. முகத்திலே அடங்காத களிப்பு. தோற்றத்திலே வெற்றியின் கருவம். "ஆத்தா!.... ஒரு பெரிய சமாசாரம் கெலிச்சிட்டுது என்மட்டுக்கும்!...சதா நான் கவலைப்பட்ட சங்கதி அது!... ஆத்தா தைலம்மை!... உம்பிட்டு கண்ணாலச் சம்பந்தம் தெகைஞ்சிருச்சம்மா. தலைக்கறி ருசி அது இருக்கிற சட்டிக்கு ரவையாச்சும் புரியாது. அது கணக்கிலே, ஆத்தா மூத்தவளோட தீர்ப்பு இது பரியந்தம் தெரியாமல் இருந்திச்சு என் வரைக்கும். ஆனா, ஒன் அதிஷ்டம், அந்தத் துப்புக்குக்கூட தடயம் கண்டு சொல்லுயிருக்கு!...ஒனக்கு மாப்பிள்ளை யாரு, தெரியுமா தைலி?..." என்று ஆனந்தத்தின் ஆர்ப்பாட்டத்துடன் அருமைத் தவப்புதல்வியிடம் ரகசியமாகப் பேசலானார் செங்காளியப்பன் சேர்வை, நரை படர்ந்த குடுமியைத் தடவிக்கொண்டார்; கருக்கரிவாள் மீசையை முறுக்கி விட்டார்.

திறந்தவாய் மூடாமல் பேசின பேச்சை திறந்த வாய் மூடாமல் கேட்டுக்கொண்டேயிருந்த கன்னி, முடிவில் எதிர்க் கேள்வி விடுத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/16&oldid=1386114" இலிருந்து மீள்விக்கப்பட்டது