பக்கம்:களத்துமேடு.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கதிர்க் கொத்து 17
மன ஆழி

ங்குனி பிறந்து விட்டது.

கன்னி முடுக்கில் நின்ற முருங்கைப் போத்து பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது. ஈசான்யத்தில் வளர்ந்திருந்த கொன்றை மரம் பூக்களைச் சொரிந்து கொண்டிருந்தது. வாசல் திட்டில் வெள்ளையும் சிவப்புமாகப் பூக்கள் கலந்து சிதறிக்கிடந்தன. இளங்காலைக் கதிரொளியில் அக்காட்சியில்தான் எத்துணை கவர்ச்சிப் பொலிவு!

‘வீட்டுக்குத் தூரம்’ இருந்த தைலம்மை மம்மலிலேயே குளித்து முழுகி வந்து விட்டாள்; அடிவயிற்றின் வலி சற்றே உபாதை மட்டுப்பட்டிருந்ததாகவே உணரலானாள். தலை மயிரை ஆற்றி, கோடாலி முடிச்சுப் போட்டிருந்தாள். கொண்டையில் ஒரேயொரு செவ்வந்திப்பூ அழகுடன் விளக்கம் தந்தது. அடுப்படியைவிட்டு வாசலுக்கு வந்தாள், சுங்கடியைச் செம்மைப்படுத்திக் கொண்டே ரவிக்கை, கைகளின் சுருக்கத்தைச் சரி செய்தாள். சற்றுமுன் நீர் மொண்டுவரச் சென்ற தருணம் சிங்காரம் எங்கே விரைவு பாய்ச்சி நடந்ததைக் கண்டதும், அவனை விளித்து சாப்பாட்டுக்கு அழைக்க எண்ணினாள். மறுகணம் அவளுக்கு பெருங்காரர் முண்டர் கோயிலில் சரவணனிடமும் சிங்காரத்திடமும் செய்த எச்சரிக்கை ஞாபகத்திற்கு வந்தது, கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியவள். ஆனாள். அயித்தை மவன் ரோசக்காரக!” என்ற தீர்மானம் அவளுள் உருப் பெற்றது.

நீர்முட்டி ஏந்தித் திரும்பிய நேரத்திலே அவள் சரவணனையும் சந்திக்கும் வாய்ப்புக்கிட்டிற்று. தான் விதித்த எச்சரிக்கையை அவனும் மறக்கவில்லை என்பதை அவள் கண்டு கொண்டாள். அதற்கு அடையாளமாக,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/161&oldid=1386295" இலிருந்து மீள்விக்கப்பட்டது