பக்கம்:களத்துமேடு.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

களத்து மேடு

தைலம்மை வாய்விட்டு நகைத்தாள்.

"ஆத்தாடி, ராக்காச்சி குரலாட்டம் கேக்குதே? அது கிட்டே யாரும் வந்து மிச்சம் கட்ட ஏலாதே? ஆச்சிகளுக்கு பாட்டு.

இட்டுக் கட்டுறதாட்டம் எப்பிடித்தான் சரளமா பாட்டு வருதோ?...படம் புடிக்கிறவுங்க கண்டாக்க, இதையும் படமாக்கிப்புடுவாங்க!" என்றாள்.

"நம்ம மாதிரி நாலு பேச்சு ஏசுறதோட நிக்கப்புடாதா? என்னமோ, செட்டித் தெருவிலே எம்புட்டோ பேருங்க விசயம் புரிஞ்சவங்க இருக்காங்க இந்த அசிங்கத்தை மட்டும் அவங்களாலே ஒக்குமத்தாய்க் கட்டுப்படுத்த முடியலையே இன்னம்?" என்று அபிப்பிராயம் கொடுத்தாள் பொன்னாயி.

தைலி தலையை உலுக்கினாள். அதற்குள் அவளுக்கு என்னவோ வேறு சிந்தனை வந்து விட்டதே! கடல் என்றால், அலைகள் அடிக்காமலா இருக்கும்? 'இந்தச் சேர்வைகாரர் விசயத்திலே இந்த ரெண்டு பேருக்குமே சீரான ஒரு அக்கறை இருக்கத்தான் இருக்குது!...'

கஞ்சிக்குக் கறிவேப்பிலை விற்றான் அரிமளத்துக்காரன்.

வாங்கினாள்.

விராட்டிச்சி பிச்சை கேட்டாள்.

போட்டாள்.

கணக்கன் விடுதி ஆள் ஒருவன் வந்து விதை நெல் 'ஐங்கலம்' விலைக்குக் கேட்டான்.

மாமூல் விலைப்படி கொடுத்தாள்

"தாயம் ஆடுவேரமாடி, தைலி?"

குரல் ஈந்தவள் பொன்னாயி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/165&oldid=1386142" இலிருந்து மீள்விக்கப்பட்டது