பக்கம்:களத்துமேடு.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

159


"நான் இருக்குற இருப்பிலே, தாயம் விளையாடுறது ஒண்ணுதான் குறைச்சல் போ!" என்று அலுத்துக் கொண்டாள் தைலி.

"என்னடி அப்பிடி மனசு விட்டுச் சொல்லுறே?...ஒன் ஒருத்தியை உத்தேசம் பண்ணி அங்கிட்டு ஒருத்தரும் இங்கிட்டு ஒருத்தருமா தவிச்சுக்கிட்டு இருக்காகளே, நீ என்ன முடிவு பேசப் போறீயோ அப்படின்னு?...ஒனக்கென்னடி ராசாத்தி?... ஒன்னோட புத்திசத்திக்கும் உங்கவூட்டுச் சொத்துபத்துக்கும் எந்த அதிர்ஷ்டசாலிக்கு எழுதிப் போட்டிருக்குதோ?....ம்...!"

"நீ போடி."

"நானு போயிட்டா, அப்புறம் எங்க வூட்டுக்காரருக்கு யாரு சோறு ஆக்குறதாம்?"

"சத்த மூச்சுடாம இருக்கப்புடாதா?"

"நான் மூச்சுடாம இருந்தா, அப்பறம் என் உயிசிரு என்ன ஆகுமாம்?"

"அட சாமியே!"

"அந்தச் சாமியைச் சொல்லிக் காட்டுடி, தைலி!"

பன்றி ஒன்று நெல்லை மொய்த்துத் தின்றது.

பொன்னாயி கல்லைக் கண்டாள்; பன்றியையும் கண்டாள்!

"அந்த நாளையிலே அரமனையிலே சுயவரம் நடக்குமாம். ரசாமவள் வந்து மாலை வீசுவாளாம். அம்பத்தாறு தேசத்து ராசாக்களிலே யாரு கழுத்திலே அந்த மாலை விளுதோ, அந்த ஆம்பளைதான் அந்த ராசாத்திக்குப் புருசனாம்!.... அதுப்படிக்கு, நீயும் நம்ம எருக்கலக் கோட்டை பூக்காரம்மாகிட்டே ஒரு பூமாலை வாங்கியாந்து, அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/166&oldid=1386146" இலிருந்து மீள்விக்கப்பட்டது