பக்கம்:களத்துமேடு.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

களத்து மேடு

தைலிக்குப் பசி. ஆனால், கஞ்சி குடிக்க மனம் ஒப்பவில்லை, ஏதேதோ சிந்தனைகள் அவள் மன ஆழியில் அலைகளாகக் கொந்தளித்தன. 'அப்பன்காரரை இன்னம் காணலையே? ஒன்றும் இருப்புக் கொள்ளாமல் உள்ளும் புறமுமாக நடைபயின்றாள்.

நல்லவேளை!

அதோ, வந்து விட்டார் செங்காளியப்பன் சேர்வை!.....

கதிர்க் கொத்து 18

கறையும் கரையும்!

வெக்கை தாளவில்லை!...

செங்காளியப்பன் சேர்வை உருமாலையை எடுத்து முகத்தைத் துடைத்தபடி உள்ளே பிரவேசித்தார்.

முகத்தைத் துடைத்தவளாக, நிலைப்படியில் நின்றாள் சேர்வை வீட்டுத்தங்கம். தைலம்மை, "வந்திட்டீயளா, அப்பா?" என்று ஆவல் துள்ளக் கேட்டாள். பாசத்தின் குமிழ்கள் சிதறிச் சேர்ந்தன.

"ஏன் ஆத்தா, உம் மூஞ்சி களைதப்பி காணுது?" என்று கவலை மேலிடக் கேட்டார் சேர்வை. தந்தை உள்ளம் தவித்தது.

"ஒண்ணுமில்லேங்க. வாங்க, பசியாற!" என்று கூறினாள். விரல்களைச் சொடுக்கி நெட்டி முறித்தாள். மருதாணி நகங்கள் பளபளத்தன.

"நான் பயந்துபோயிட்டேன். நல்லவேளை!.... சரி, ஆத்தா! கஞ்சிக் கலயத்தை எடுத்து வச்சு, வட்டியிலே கஞ்சி ஊத்து, இந்தா வந்திட்டேன் மூஞ்சி கழுவிக்கிட்டு!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/169&oldid=1386160" இலிருந்து மீள்விக்கப்பட்டது