பக்கம்:களத்துமேடு.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

163


அவள் நயமாக மூக்கை உறிஞ்சியபடி, உள்ளே நடந்தாள். தகப்பனின் ஆகார வசதியைச் செய்வதில் கருத்துக் கொண்டாள். வக்கணையாகச் சாப்பிடுவார் சேர்வை. அக்கரைச்சீமையில் புழங்கியவரானதால், அப்படிப்பட்டதொரு வாய் ருசிபழகிவிட்டது. பணம் மிதந்தால், ருசியும் மிதக்கவேண்டும்தானே? உறைப்பு கூடுதல் வேண்டும். வேளாவேளைக்குக் கவுச்சியும் தேவைப்படும் அவருக்கு. ஊறுகாயும் கறாறாக இருந்தாக வேண்டும்.

தந்தை உண்டு முடியும் வரை வாயாடாமல் இருந்தாள் தைலம்மை

அவர் சாப்பிட்டு முடித்தார். "ஆத்தா, மதியத்துக்குக் கொஞ்சம் சுடு தண்ணி வச்சுத்தா," என்றார்.

'சரி' சொன்னாள் மகள். சிணுங்கல் இராமல் வெட்டிப் பாய்ந்தது. பிறகு தொண்டையைக் கனைத்துக் கொண்டாள். "என்னமோ தவசல் நடந்துச்சாமே?" என்று பைய கேட்டாள்.

"அது ஒங்காதுக்கும் எட்டிருச்சா? செல்லாயியோட முதல் புருசன் அவளை சதா அடிச்சு மிதிச்சு அவள் சேர்த்து வச்சிருந்த பணத்தை சீட்டாட்டத்திலே கல்லாக்கறியா அடிக்க முனைஞ்சான். இந்தத் தொல்லை பொறுக்காம, அவ எங்கிட்டே ஓடியாந்து தஞ்சமடைஞ்சா. நான் அவளுக்கு அடைக்கலம் குடுத்தேன். அதுக்கப்புறம் ரெண்டு வருசம் அரிதி அவன் இந்தப்பக்கமே தலையைக் காட்டலை. இப்ப அவள் செத்துப் போன சேதி கிடைச்சு இங்கிட்டு ஓடியாந்து, அவ வச்சிருந்த பணம் பூராத்தையும் கொடுன்னு எங்கிட்டே கேட்டான். அவளை வச்சுச் சவரணை செஞ்சதுக்கு அல்லாப் பணமும் தீர்ந்துபோயி, மேற்கொண்டு நானே ஏகப்பட்ட பணம் அவளுக்காக செலவழிச்ச நடப்பையும் இதம்பதமாகச் சொல்லிப் பார்த்தேன். அவன் கேட்காம, வார்த்தையை தடிப்பா வுட்டான். அப்பாலே எனக்குக் கண்டவாகிலே கோவம் மூண்டுச்சு. ரெண்டு பேருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/170&oldid=1386165" இலிருந்து மீள்விக்கப்பட்டது