பக்கம்:களத்துமேடு.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

களத்து மேடு


கைகலப்பு வந்திச்சு. அந்தச் சமயத்திலே சரவணணும் சிங்காரமும் வந்து குதிச்சு, அந்தப் பயலை வசமா மொத் திப்புட்டாங்க!... அந்தப் போக்கணம் கெட்ட பயல் எம் பேரிலே தாவா தொடுக்கிறதாக கருவிக்கிட்டு ஓடிட்டான்!... இந்த விசயத்திலே என்னை அசைக்கவே வழியில்லே!... இதுக்காக நீ ஒண்ணும் மனசை அலட்டிக்காதே, ஆத்தா!"

அவர் விஷயத்தை விளக்கினார்.

ஒவ்வொரு வில்லங்கமும் அறாம இருக்குதே?... "இதை யெல்லாம் நினைக்கிறதா? இல்லே, எங்கண்ணாலத்தைப் பத்தி எண்ணுறதா? விதி கண்ணாமூச்சு காட்டுது எனக்குக் கண்ணைக் கட்டிக் காட்டிலே விட்ட தொத்து இருக்குதுங்களே?" என்று துயர் காட்டினாள் தைலி.

"ஆத்தா, நீ மனசு செலுத்தி ரோசிச்சு முடிவு கட்ட வேண்டிய உங்கண்ணால் நடப்பைப்பத்திநீ கவலைப்பட்டா யதேஷ்டம். மற்றப்படி என்னாலே ஒனக்கு யாதொரு சள்ளைக் கட்டும் வராது. மாசமும் பொறந்திடுச்சு. காற்றாட்டம் பொழுதும் ஓடிடும். பங்குனி நாலிலே ஒரு முகூர்த்த நாள் இருக்கு. அதுக்கு ஒருநாள் முந்தியானும் நீ உம்முடிவை திட்டவட்டமாச் செப்பிப்புடு. உம் பேச்சுத்தான் எனக்கும் முடிவு. உம் முடிவுதான் எனக்கு மூச்சு!...." என்றார் சேர்வை,

"அதெல்லாம் நினைப்பிலே இருக்குதுங்க!"

பொன்னாயி வந்து தைலியிடம் சொல்லிக் கொண்டு போனாள்.

அவள் பேசி வாய் மூடவில்லை.

அவர் எழுந்து வெளிப்பகுதியை நோக்கி நடந்தார்.

வாசலில் எலும்பும் தோலுமா ஒருத்தி நின்றாள். பரதைக் கோலம். பஞ்சடைந்த கண்கள் கிழிசல் துணிமணிகள். அவள் சேர்வையை ஆத்திரம் சுழிக்க நோக்கினாள். "ஜயா, இனிமே என்னாலே உசிரோட இருக்க முடியாதுங்க,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/171&oldid=1386170" இலிருந்து மீள்விக்கப்பட்டது