பக்கம்:களத்துமேடு.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

165


என்னை உங்க கையாலேயே கொன்னு போட்டுப்புடுங்க ஐயா! உங்களுக்குக் கோடிப்புண்ணியம் கிடைக்குமுங்க!...." என்று அழுதாள் அந்த ஏழைப் பெண்.

"சனியனே! நீ இன்னம் தொலையலையா?"

"ஏன் இப்படிக் கேக்கமாட்டீங்க? ஒருகாலத்திலே என்னோடு சவகாசம் தேவைப்பட்டுச்சு உங்களுக்கு, அப்ப எங்கிட்டே என்னோட அழகு இருந்திச்சு. பொறகு என் செகல் வடிஞ்சதும், என்னைக் கைவிட்டுப்புட்டு வேறொத்தியோடே சுத்தி அலைஞ்சிங்க! ஒங்களை நம்பி ஏமாந்த என்னை நல்லா ஏசுங்க, பேசுங்க. உங்க கையாலே ஏதாச்சும் நஞ்சைக் குடுங்க. உங்க சங்கனாத்தமே இல்லாமக் கண்ணை மூடிபோடுறேன்!..." என்று அவள் அவரது, கால்களைப்பற்றிக் கதறினாள்.

அவளை எற்றித் தள்ளினார் சேர்வை, அதே சமயம், தைலியும் வெளியே வந்து விட்டாள். மறைந்திருந்து மேலும் கேட்கக் கூடிய நிலை. அங்கு உருவாகவில்லை வந்த தைலம்மை, கதறி அழுத அவ்வுருவத்தைப் பார்த்தாள். அவளுக்கு நினைவு கூடி வந்தது. அந்த அபலையை இனம் கண்டுகொள்ள அவளால் முடிந்தது. ஒரு நாள் தண்ணீர்க் குடத்துடன் திரும்பிய காலை, காத்தான் செட்டி சவுக்கைத் தோப்பருகில் மயக்கம் போட்டுக் கிடந்த இவளை வீட்டுக்கு அழைத்து வந்து சோறு படைத்து அனுப்பியதைத் தைலி நினைவு கூர்ந்தாள். இவள் பேரைக் கேட்டபோது, 'தாயே' இந்த நாதியத்தவளோட ஊரு, பேரு, கதை காரணம் எல்லாம் எதுக்கம்மா ஒனக்கு? நான் போயிட்டு வாரேன். தெய்வத்தை நினைச்சாலும் நினைக்காங்காட்டியும் தெனைக்கும் ஒன்னை மனசார நினைக்க மறக்க மாட்டேனாக்கும்!' என்று சொன்னவாகிலே விரைந்து மறைந்த விந்தையின் தடம் இப்போது தைலிக்குப் பட்டவர்த்தனமாகப் புரிந்துவிட்டது. அவள் அந்த அபலையை நெருங்கினாள். "தாயே, நடப்பைப் புரிஞ்சுக்கிட்டேன். எங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/172&oldid=1386180" இலிருந்து மீள்விக்கப்பட்டது