பக்கம்:களத்துமேடு.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

173


"ஆத்தா!.... என்ன ஆத்தா செய்யுது?" என்று பதறித் துடித்தார் தந்தை.

தைலியின் முகம் வேர்வை கொண்டு திகழ்ந்தது. கண்களைத் திறந்தாள். தகப்பனை ஏக்கத்துடன் பார்த்தாள் "இப்ப நாலுநாளா இம்மாதிரி தான் நெஞ்சுவலி வருது அடிக்கடி! நீங்க சொல்லுற உபாயத்துக்குத் தேவையே கிடையாதுங்க. நானே இண்ணக்குள்ளாற எம் முடிவைச் சொல்லிப்புடுறேனுங்க!... நீங்க மட்டும் எப்பவும் திடமாயிருக்கோணும்!"... என்று சொல்லி நிறுத்தினாள் தைலி. "ஆமாங்க அப்பாரே!... என்று மேலும் அழுத்தத்துடன் கூறினாள் சேர்வையின் மகள். அவள் நாசி புடைத்தது. நெஞ்சி ஏறி இறங்கியது.

சேர்வை மௌனம் காத்தார்.

கிருத்திகை விரதத்துக்கான வீட்டு அலுவல்களில் அவள் மனம் செலுத்த முற்பட்டாள் 'விருதத்துக்கு மாப்புள்ளைக்காரக ரெண்டுபேரையும் சாப்பாட்டுக்குக் கூப்பிடவேணும்னு ஆசை ஓடுது. ஆனா...? அதற்கு மேல் அவள் எண்ணம் தொடரவில்லை. பெருமுச்சு மட்டுமே தொடர்ந்தது. நல்ல தண்ணீரை எடுத்து முகத்தில் தெளித்துக் கொண்டாள். ஒரு மடக்கு குடித்தாள். எதையோ நினைவு படுத்திக்கொண்டாள் அவளுக்கு மேனிபுல்லரித்தது. "ஆமா, அதான் எம்முடிவு!...வைராக்கியம் அவள் சித்தத்தில் கொடிகட்டி அரசாண்டது!


தாய்மைக் கோலப்பொலிவுடன் வந்த அங்கம்மா, "தைலி, ஒரு இணுக்கு கருகப்பிலை இருந்தாத் தாரீயா?" என்று கோட்டாள்.

தைலி இருந்ததில் கொஞ்சம் எடுத்துக் கொடுத்தாள்.

'இந்த மாசம் கிட்டணியிலே ஒனக்குக் கண்ணாலம் ஆகிப்புடுமின்னு பேசிக்கிறாங்களே? ரொம்ப சந்தோசம்!...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/180&oldid=1386236" இலிருந்து மீள்விக்கப்பட்டது