பக்கம்:களத்துமேடு.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

களத்து மேடு


தைலம்மை, ஆத்தாளின் சந்நிதியின்முன் வந்து நின்றாள். குங்குமம் இட்டுக் கொண்டாள்.

பொன்னாயி பின்னால் நின்றாள்.

"ஆத்தா மூத்தவளே!"

தைலம்மை உச்சாடனம் கொண்டவளாக தன்னை மறந்த கதியில் வாய்விட்டு அழைத்தாள். அவளது ஒன்றிய இதயம் அந்தத் தாயை அழைத்தது!

ஆத்தாளுக்குப் பேசத் தெரியுமா?

பின், ஏன் அவள் பேசவில்லை?

மீண்டும் அந்த ஆத்தா புன்னகைக் கோலத்தோடுதான் தரிசனம் கொடுத்தாள்.

'ஆத்தா! எம்முடிவை நீ அறிஞ்சவ. எம்பேச்சை அந்த மாப்புள்ளைக்காரகளுக்கு ஊடாலே உடைச்சு வைச்சுப்புடப்போறேன். அதுக்கு உண்டான வல்லமையைத் தா எனக்கு!.. என்னைக் காப்பாத்து!..."

தைலியின் கண்ணிர் மாலையாக நீண்டது.

காட்டேறித் தாய்க்கு மாலை சூட்டி நன்றிக் கடன் செலுத்தத்தான் அவள் கண்ணிர் மேலும் மேலும் வளர்ந்ததோ?

பொன்னாயி நகர்ந்தார். தைலியின் புதிய முகத்தெளிவைக் கண்டு விழித்தாள். அவள் நெஞ்சு அடித்துக் கொண்டது.

"வாடி பொன்னாயி, நடப்போம். அப்பன்காரரு திரும்பினாலும் திரும்பியிருப்பாக போகையிலே, நம்ம ஊர்க் களத்து மேட்டுப்பாதையிலே போவம்!..." என்று சொல்லி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/183&oldid=1386253" இலிருந்து மீள்விக்கப்பட்டது